பெண்ணுடன் தகாத உறவு... துண்டு துண்டாக வெட்டப்பட்ட திமுக பிரமுகர்: தலையை ஆற்றில் வீசிய கொடூரம்

பெண்ணுடன் தகாத உறவு... துண்டு துண்டாக வெட்டப்பட்ட திமுக பிரமுகர்: தலையை ஆற்றில் வீசிய கொடூரம்
தமீம் பானு

சென்னையில் தகாத உறவால் திமுக பிரமுகர் ஒருவர் துண்டு துண்டாக வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். தலையை வெட்டி ஆற்றில் வீசி, உடலை சாக்கு மூட்டையில் கட்டி வீட்டில் வைத்திருந்த பெண் உட்பட மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை மணலி செல்வ விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் சக்கரபாணி (65). வட்டி தொழில் செய்து வந்த சக்கரபாணி திமுகவில் திருவொற்றியூர் 7-வது வார்டு பகுதி பிரதிநிதியாக இருந்துள்ளார். கடந்த 10-ம் தேதி வேலை நிமிர்த்தமாக வீட்டை விட் வெளியே சென்ற சக்கரபாணி வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த அவரது உறவினர்கள் எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டதால் சந்தேகமடைந்த உறவினர்கள் இது தொடர்பாக மணலி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

சக்கரபாணி
சக்கரபாணி

மணலி போலீஸார் காணாமல் போனதாக வழக்கு பதிவு செய்து சக்கரபாணியை தேடி வந்தனர். இந்நிலையில் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்த சக்கரபாணியின் செல்போன் நேற்று மட்டும் ஆன் செய்யப்பட்டதை அறிந்த போலீஸார் உடனே அவரது செல்போன் எண்ணின் டவரை லொக்கேஷனை ஆய்வு செய்தபோது ராயபுரம் பகுதியை காட்டியது. உடனே போலீஸார் டவர் லொக்கேஷனை வைத்து ராயபுரம், கிரேஸ் கார்டன், 3-வது தெருவில் வசிக்கும் அஸ்லாம் உஜைனி என்பவரது வீட்டிற்கு சென்று பார்த்தபோது அங்கு அவரது மனைவி தமீம் பானு (35), மைத்துனர் வசிம்பாஷா (35), ஆட்டோ டிரைவர் டில்லிபாபு (29) ஆகியோர் இருந்தனர். பின்னர் போலீஸார் வீட்டு முழுவதும் சோதனை நடத்தினர். அப்போது ரத்தக்கறையுடன் சாக்கு மூட்டை ஒன்று இருந்ததை போலீஸார் கண்டுபிடித்தனர். உடனே சாக்கு மூட்டையை பிரித்து பார்த்தபோது அதில், சக்கரபாணியின் உடல் துண்டு துண்டாக இருந்தை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து, சாக்கு மூட்டையில் இருந்த உடலை போலீஸார் கைப்பற்றியதுடன் தமீம்பானு (40), அவரது மைத்துனர் வசீம்பாஷா (35), ஆட்டோ டிரைவர் டில்லிபாபு (29) ஆகியோரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், தமீம்பானு மணலியில் வசித்து வந்தபோது அவருக்கும் சக்கரபாணியிக்கும் இடையே கொடுக்கல் வாங்கல் மூலம் பழக்கம் ஏற்பட்டு பின்னர் நாளடைவில் தகாத உறவாக மாறியது. இதனையடுத்து தமீம்பானுவின் கணவருக்கு இது தெரியவரவே அவர்கள் மணலி வீட்டை காலி செய்து விட்டு ராயபுரம் கிரேஸ் கார்டனில் குடியேறினர். ராயபுரம் வந்த பின்னரும் தமீம்பானு, சக்கரபாணி இடையே தகாத உறவு தொடர்ந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 10-ம் தேதி தமீம் பானு வீட்டிற்கு வந்த சக்கரபாணி அவருடன் உறவு வைத்திருந்ததை பார்த்த அவரது மைத்துனர் வசிம்பாஷா ஆத்திரத்தில் அவரை அடித்து கொலை செய்துள்ளார். பின்னர் சக்கரபாணி உடலை என்ன செய்வது என்று தெரியாமல் தமீம்பானு, நண்பர் டில்லிபாபு ஆகியோரின் உதவியுடன், சக்கரபாணியின் உடலை துண்டு துண்டாக வெட்டி, சாக்கு மூட்டையில் கட்டினர்.

பின்னர் ஆட்டோ ஓட்டுநர் டில்லிபாபு சக்கரபாணியின் தலையை மட்டும் கொண்டு சென்று அடையாறு ஆற்றில் தூக்கி வீசி விட்டு வீடு திரும்பியுள்ளார். பின்னர் மற்ற உடல் பாகங்களையும் அதே ஆற்றில் வீசுவதற்கு திட்டமிட்டனர். இதற்கிடையே, சக்கரபாணியின் செல்போனை வசீம் பாஷா தவறுதலாக ஆன் செய்தபோது செல்போன் டவர் லொக்கேஷனை வைத்து போலீஸார் கண்டுபிடித்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார் தமீம்பானு, வசிம்பாஷா, டில்லிபாபு ஆகியோரை கைது செய்தனர். மேலும் அடையாறு ஆற்றில் வீசப்பட்ட சக்கரபாணி தலையை தேடும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.