ஜிஎஸ்டி அதிகாரிகளின் பிடியில் திமுக நிர்வாகி: டிஜிட்டல் ஆவணங்கள் பறிமுதல்!

ரெய்டு நடந்த திமுக நிர்வாகியின் வீடு.
ரெய்டு நடந்த திமுக நிர்வாகியின் வீடு.ஜிஎஸ்டி அதிகாரிகளின் பிடியில் திமுக நிர்வாகி: டிஜிட்டல் ஆவணங்கள் பறிமுதல்!

சென்னையில் திமுக பகுதி பொருளாளர் வீட்டில் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது அவரது வீட்டில் டிஜிட்டல் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து அவரை அழைத்துச் சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை திருவல்லிக்கேணி லால்முகமது தெருவில் வசிப்பவர் பிரேம்ராஜா(35). இவர் திமுகவில் திருவல்லிக்கேணி பகுதி பொருளாளராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு இவரது வீட்டில் ஜிஎஸ்டி அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். ஜிஎஸ்டி புலனாய்வு பிரிவின் மூத்த பெண் அதிகாரி சீதாலட்சுமி தலைமையிலான அதிகாரிகள் 2 மணி நேரம் சோதனை நடத்தியடன் முக்கிய டிஜிட்டல் ஆவணங்களைப் பறிமுதல் செய்தனர்.

இந்த சோதனை முடிந்த பின்னர் திமுக நிர்வாகி பிரேம்ராஜாவை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 20-ம் தேதி பிரேம்ராஜாவின் நெருங்கிய நண்பரான பெரம்பூரைச் சேர்ந்த வியாபாரி பிரேம்நாதன் என்பவரை ஜிஎஸ்டி அதிகாரிகள் வழக்கு ஒன்றில் கைது செய்தனர்.

பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் திமுக நிர்வாகி பிரேம்ராஜா அதிக நேரம் பிரேம்நாதனுடன் செல்போனில் பேசியது தெரியவந்ததை அடுத்து பிரேம்ராஜா வீட்டில் சோதனை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in