மெஸ்ஸி கோல் கொண்டாட்டம்: திமுகவினர் தீக்காயம்

மெஸ்ஸி கோல் கொண்டாட்டம்: திமுகவினர் தீக்காயம்
சித்தரிப்புக்கான படம்

உலகக்கோப்பை கால்பந்து இறுதி போட்டியில், அர்ஜென்டினா வெற்றியை பட்டாசு வெடித்து கொண்டாடியதில், வடசென்னையை சேர்ந்த இருவர் காயமடைந்தனர். அனுமதியின்றி பொது இடத்தில் பெரிய திரை அமைத்து கொண்டாடத்தில் ஈடுபட்டவர்கள் திமுகவை சேர்ந்தவர்கள் என்பதும் விசாரணையில் அம்பலமானது. 

நேற்று நடைபெற்ற உலககோப்பை கால்பந்து இறுதி போட்டியில் அர்ஜெண்டினா, பிரான்ஸ் அணிகள் மோதின. கால்பந்து ரசிகர்கள் அதிகமுள்ள வடசென்னையில் இந்த இறுதிப் போட்டியை காண்பதற்காக ராயபுரம், வியாசர்பாடி என பல்வேறு இடங்களில் பெரியதிரையில் ஒளிப்பரப்பானதும் நடந்தேறின. 

குறிப்பாக ராயபுரம் ராபின்சன் விளையாட்டு மைதானத்தில் ஒளிபரப்பப்பட்ட இறுதி போட்டியை 150க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆரவாரத்துடன் கண்டுகளித்தனர். அப்போது அர்ஜென்டினாவை சேர்ந்த மெஸ்ஸி கோல் அடித்த மகிழ்ச்சியை, அங்குள்ள இளைஞர்கள் சிலர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

அப்போது எதிர்பாரா விதமாக பட்டாசு சிதறி அங்கு இருந்த ராஜேஷ்(21) மற்றும் ரஜினீஷ்(20) ஆகிய இளைஞர்களின் உடலில் தீக்காயங்களை விளைவித்தன. இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 

இந்த தீவிபத்து தொடர்பாக ராயபுரம் போலீஸார் நடத்திய விசாரணையில், திமுக வழக்கறிஞரான நாதன் என்பவர் ராபின்சன் மைதானத்தின் பராமரிப்பாளராக இருந்து வருவதும், நேற்று பெரியதிரையில் உலககோப்பையை காண அவரே ஏற்பாடு செய்ததும் தெரிய வந்தது. இந்த ஏற்பாட்டுக்கு போலீஸாரிடம் உரிய அனுமதி பெறாது, பெரியதிரை அமைத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரிய வந்தது. சம்பவம் தொடர்பாக போலீஸார் மேலும் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in