பெண்கள் விவகாரத்தால் தகராறு - தொழிலதிபர் கொலை வழக்கில் தரகர் கைது: வெளியானது திடுக்கிடும் தகவல்கள்

பெண்கள் விவகாரத்தால் தகராறு - தொழிலதிபர் கொலை வழக்கில் தரகர் கைது: வெளியானது திடுக்கிடும் தகவல்கள்

சென்னை ஆதம்பாக்கம் தொழிலதிபர் கொலை வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பெண்களுடன் உல்லாசமாக இருக்க சென்ற இடத்தில் ஏற்பட்ட தகராறில் தொழிலதிபர் அடித்து கொலை செய்யப்பட்டதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை ஆதம்பாக்கம் ராமகிருஷ்ணாபுரம் 3வது தெருவை சேர்த்தவர் பாஸ்கரன்(67). இவருக்கு திருமணமாகி இரு மகன்கள் உள்ளனர். ஒரு மகன் வெளிநாட்டிலும், மற்றொரு மகன் பாஸ்கரனுடன் வசித்து வருகின்றார். சினிமா தயாரிப்பாளரான பாஸ்கரன் ராம்கி நடித்த ‘சாம்ராட்’ உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார்.. பின்னர் சினிமாவில் இருந்து விலகி கட்டுமான தொழில் செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 2ம் தேதி வீட்டில் இருந்து வெளியே புறப்பட்டு சென்ற பாஸ்கரன் இரவு முழுதும் வீடு திரும்பாததால் அவரது மகன் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் தந்தையை கண்டு பிடித்து தருமாறு புகார் அளித்தார்.

இதற்கிடையே நெற்குன்றம் சாலை சின்மாய நகர் மேம்பாலம் அருகே துப்புரவு பணியாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது அங்கு பிளாஸ்டிக் பையில் கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் ரத்தகாயங்களுடன் இருந்த ஆண் சடலம் ஓன்று இருப்பதை கண்டு அதிர்ச்சியடைத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.. அதன்பேரில் அங்கு சென்ற விருகம்பாக்கம் போலீசார் பிளாஸ்டிக் பையில் கை,கால்கள் கட்டப்பட்டு இறந்த நிலையில் இருந்த உடலை கைபற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.. பின்னர் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து உயிரிழந்தவரின் உடலை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டனர்.. அப்போது கொலை செய்யபட்ட நபர் ஆதம்பாக்கத்தில் காணமால் போன தொழிலதிபர் பாஸ்கரன் என்பதை அவரது மகன் மூலம் உறுதிப்படுத்தினர்.

போலீசார் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது வாலிபர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் பாஸ்கரை கொலை செய்து பிளாஸ்டிக் பையில் அடைத்து வைத்து வீசி சென்றது பதிவாகி இருந்தது. உடனே போலீசார் இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து கொலை செய்த நபரை பிடித்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதில் பிடிபட்ட நபர் விருகம்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த கணேசன் (35) என்பது தெரியவந்தது. விபச்சார தொழில் மற்றும் விடுதி நடத்தி வரும் கணேசனுக்கும், கொலை செய்யபட்ட தொழிலதிபர் பாஸ்கரனுக்கும் இடையே கடந்த இரண்டு வருடங்களாக தொடர்பு இருந்து வந்தது தெரியவந்தது. பெண் மோகத்திற்கு அடிமையாக பாஸ்கரன் அடிக்கடி புரோக்கர் கணேசனுக்கு போன் செய்து உல்லாசத்திற்கு பெண்களை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டதன் பேரில் கணேசனும் பெண்களை அனுப்பி பணம் சம்பாதித்து வந்துள்ளார்.

கடந்த 2ம் தேதி வழக்கம் போல் பாஸ்கரன் புரோக்கர் கணேசனை தொடர்பு கொண்டு இரு பாலியல் பெண்கள் அனுப்பி வைக்குமாறு கூறிவிட்டு வழக்கம் போல் செல்லும் விடுதிக்கு சென்றுள்ளார். அங்கு அறையில் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதாக கூறப்படுகிறது. உல்லாசத்திற்கு அழைத்த பெண்கள் வர தாமதம் ஆனதால் கோபமடைந்த பாஸ்கரன் மதுபோதையில் புரோக்கர் கணேசனை மோசமாக திட்டியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த கணேசன் பாஸ்கரனை கையால் அடித்து தள்ளியதில் கீழே விழுந்த அவருக்கு தலையில் ரத்தகசிவு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். கீழே விழுந்த பாஸ்கரன் இறந்து விட்டதாக எண்ணி அவரது கை,கால்களை நைலான் கயிறால் கட்டி பின்னர் வாயில் துணியை வைத்து அடைத்து பின்னர் பிளாஸ்டிக் கவரில் அவரது உடலை கட்டி தனது இருசக்கர வாகனத்தில் உடலை வைத்து எடுத்து சென்று நெற்குன்றம் சாலையில் வீசிவிட்டு சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து போலீசார் கணேசன் மீது கொலை வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.மேலும் இறந்த உடலை எடுத்து செல்லப்பயன்படுத்திய அவரது இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். பாலியல் பெண்களுடன் உல்லாசமாக இருக்க சென்ற தொழிலதிபர் உயிரை இழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in