மரம் வெட்டியதில் தகராறு... ரைஸ்மில் உரிமையாளர் குத்திக் கொலை!

கொலையாளிகள்
கொலையாளிகள்

மரத்தை வெட்டியது குறித்து கேள்வி எழுப்பியதற்காக நான்கு பேர் சேர்ந்து ரைஸ்மில் உரிமையாளர் ஒருவரை குத்திக் கொலை செய்த சம்பவம் மதுரையில் நடந்திருக்கிறது.

மதுரையில் தெப்பக்குளம் சிமெண்ட்சாலை பகுதியை சேர்ந்தவர் சவுந்திரகுமார். இவர் சிந்தாமணி ராஜமான்நகர் பகுதியில் ரைஸ் மில் வைத்து நடத்தி வந்தார். ரைஸ்மில்லை ஒட்டியே சவுந்திரகுமாருக்கு சொந்தமான வணிக வளாகம் ஒன்றும் உள்ளது. இந்த வணிக வளாகத்துக்குச் செல்லும் பகுதியிலயே பல ஆண்டுகளாக மரம் ஒன்று இருந்து வந்துள்ளது. இந்த மரத்தை சவுந்திரகுமாருக்கு தெரியாமலே சிலர் நேற்று மதியம் வெட்டி சாய்த்துள்ளனர். இதை அறிந்து அதிர்ச்சியடைந்த சவுந்திரகுமார், மரத்தை வெட்டிய நபர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது இருதரப்புக்கும் இடையே வாக்குவாதமும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டுள்ளது.

வெட்டப்பட்ட மரம்
வெட்டப்பட்ட மரம்

இதனையடுத்து சவுந்திரகுமாருடன் வாக்குவாதம் செய்த 4 பேரும் அங்கிருந்து சென்றிருக்கிறார்கள். சிறிது நேரத்தில் மீண்டும் திரும்பி வந்த அந்தக் கும்பல் சவுந்திரக்குமாரை கத்தியால் குத்தியும், தாக்கியும்விட்டு தப்பி ஓடியிருக்கிறது.

இதில் படுகாயம் அடைந்த சவுந்திரகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கீரைத்துறை போலீஸார் சவுந்திரக்குமாரின் உடலை மீட்டு உடற்கூராய்விற்கு அனுப்பிவைத்தனர். பின்னர் சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கொலை நடந்த இடம்
கொலை நடந்த இடம்

இதையடுத்து கொலைக் கும்பலைச் சேர்ந்த கீரைத்துறை மாரிமுத்து, முத்துப்பாண்டி, வேலுச்சாமி, மேல அனுப்பானடியைச் சேர்ந்த கார்த்திக் ஆகிய 4 பேரையும் போலீஸார் இன்று கைது செய்தனர்.

மரத்தை வெட்டிய தகராறில் ரைஸ்மில் உரிமையாளர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...    

காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த அதிர்ச்சி... ரூ.1,700 கோடி அபராதம் செலுத்த வருமான வரித்துறை நோட்டீஸ்!

அதிர்ச்சி... மாமியாரை தரதரவென இழுத்துச் சென்று குப்பைக் கிடங்கில் போட்ட மருமகள்!

பகீர்... ஒரே இடத்தில் 60 பசுக்கள் கொலை...10,000 கிலோ இறைச்சி பறிமுதல்!

கோயிலுக்கும், மசூதிக்கும் ஒரே பெயர் பலகை; கெத்து காட்டும் குடியிருப்புவாசிகள்!

திட்டமிட்டு கொல்லப்பட்டாரா முக்தார் அன்சாரி; மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவு

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in