தடம் புரண்ட ரயில்... அலறிய பயணிகள்... தொடரும் சோகம்!

தடம் புரண்ட ரயில்
தடம் புரண்ட ரயில்
Updated on
1 min read

டெல்லி ஆனந்த் விஹார் மற்றும் உத்தரப் பிரதேசத்தின் காஜிபூர் நகருக்கு இடையே இயக்கப்படும் சுஹைல்தேவ் எக்ஸ்பிரஸ் ரயிலின் இரண்டு பெட்டிகள் நேற்று இரவு தடம் புரண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தடம் புரண்ட ரயில்
தடம் புரண்ட ரயில்

உத்தரப் பிரதேசம் மாநிலம் டில்லி-காசிபூர் ஆனந்தவிஹார் இடையே சுஹைல் தேவ் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று வழக்கம் போல் பிரக்யாராஜ் ரயில் நிலையத்திலிருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டது. பிரக்யாராஜ் நகரை விட்டு சில மைல் தூரம் சென்று கொண்டிருந்த போது திடீரென தடம் புரண்டது. இதனால் பயணிகள் அலறித் துடித்தனர்.

இந்த சம்பவத்தால், இரண்டு பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகின. இச்சம்பவத்தில் உயிர்பலி சேதம் நிகழவில்லை. தகவலறிந்த மீட்பு படையினர் ரயில்வே போலீஸார் துரிதமாக செயல்பட்டனர்.அப்பகுதியில் பாதை சரி செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

கடந்த ஞாயிறன்று ஆந்திராவின் விஜயநகரம் அருகே, இரு ரயில்கள் மோதி விபத்துக்கு உள்ளாகின.இதில், பாலசா பயணியர் ரயிலின் மூன்று பெட்டிகள் தடம் புரண்டன. இதையடுத்து ரயில் விபத்துகள் தொடர்கதையாகி வருகின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in