அதிர்ச்சி... ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் 3 பேர் கைது- சதித்திட்டமா என விசாரணை

டெல்லி போலீசார்
டெல்லி போலீசார்
Updated on
1 min read

டெல்லி போலீசார் நடத்திய அதிரடி நடவடிக்கையில் 3 ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரையும் பிடிக்க தலைக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

புனே ஐஎஸ்ஐஎஸ் வழக்கு தொடர்பாக மூன்று ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் குறித்து தகவல் அளித்தால் தலா 3 லட்சம் ரூபாய் வெகுமானம் வழங்கப்படும் என என்.ஐ.ஏ சமீபத்தில் அறிவித்திருந்தது. இதில் பொறியாளரான ஷாநவாஸ் என்பவர் பூனே போலீசாரின் விசாரணையின் போது தப்பி ஓடி டெல்லியில் வசித்து வருவதாக தேசிய புலனாய்வு முகமை அறிவித்திருந்தது. இவர்கள் மூவரையும் பிடிப்பதற்கு தகவல் அளித்தால் தலா 3 லட்சம் ரூபாய் வெகுமானம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து டெல்லி போலீஸார் மாநிலம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஷாநவாஸ் உட்பட மூன்று பேரை டெல்லி போலீஸ் சிறப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து வெடிகுண்டுகளை தயாரிப்பதற்கான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

டெல்லி போலீசார்
டெல்லி போலீசார்

கடந்த ஜூலை 17 மற்றும் 18ம் தேதிகளில் புனேவின் கொத்ருடு பகுதியில் இருசக்கர வாகனம் ஒன்றை திருடிச் செல்ல முயன்ற போது ஷாநவாசை புனே போலீசார் கைது செய்திருந்தனர். இருப்பினும் போலீசாரின் பிடியிலிருந்து தப்பிய ஷாநவாஸ் டெல்லியில் வசித்து வருவதாக தகவல்கள் கிடைத்த போதும் அவரை பிடிக்க முடியாமல் தேசிய புலனாய்வு முகமை போலீசார் திணறி வந்தனர். தற்போது டெல்லி போலீஸார் அவரை கைது செய்துள்ள நிலையில் தேசிய புலனாய்வு முகமை போலீசார் அவரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in