டெல்லி ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து!போராடும் தீயணைப்பு வீரர்கள்

ரசாயன தொழிற்சாலை தீ விபத்து
ரசாயன தொழிற்சாலை தீ விபத்து

டெல்லியில் உள்ள ரசாயனத் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து, தீ மளமளவென பரவி வருவதால் தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்து வருகின்றனர்.

டெல்லியின் அலிபூர் மாவட்டத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  தற்போது, 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றது. அந்தப் பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளதால் மக்கள் பதட்டமடைந்துள்ளனர்.

இதுவரை, யாருக்கும் காயம் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. பிற்பகல் 3 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது. மேலும், தீ விபத்துக்கான காரணமும் தெரியவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன் டெல்லி எம்ய்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.


Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in