அரசு மருத்துவமனையில் பகீர்... பிரசவத்திற்கு பின் 3 பெண்கள் அடுத்தடுத்து மரணம்; எம்எல்ஏ காட்டிய அதிரடி!

பாமக எம்எல்ஏ வெங்கடேஸ்வரன்
பாமக எம்எல்ஏ வெங்கடேஸ்வரன்

தர்மபுரி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு பின் 3 பெண்கள் உயிரிழந்த நிலையில், தர்மபுரி தொகுதி எம்எல்ஏ நேரில் ஆய்வு மேற்கொண்டு, இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த சில தினங்களில் பிரசவித்த தாய்மார்கள் 3 பேர் பிரசவத்திற்கு பிறகு உயிரிழந்த சம்பவம் குறித்து தருமபுரி எம்.எல்.ஏ. எஸ்.பி.வெங்கடேஸ்வரன் நேற்று அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு செய்தார்.

அப்போது அங்கு பணியில் இருந்த மருத்துவக் கல்லூரி முதல்வர் அமுதவல்லி, மருத்துவர்கள் உள்ளிட்டோரிடம் பிரசவித்த தாய்மார்கள் உயிரிழப்புக்கான காரணம் குறித்து எம்.எல்.ஏ. வெங்கடேஸ்வரன் கேள்வி எழுப்பினார். அதற்கு மருத்துவக் கல்லூரி மருத்துவர் பதில் சொல்ல முடியாமல் திணறினார். அவர்களது இறப்பு குறித்து விரிவாக அறிக்கை அளிக்க வேண்டும் என்று மருத்துவர்களிடம், அவர் உத்தரவிட்டார்.

மேலும், இனிவரும் காலங்களில் பிரசவித்த தாய்மார்கள் உயிரிழப்பு ஏற்படாத வகையில் சிறப்பான சிகிச்சை வழங்க வேண்டும். தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வருபவர்களை அலைக்கழிக்ககூடாது.

கிராமத்திலிருந்து வருபவர்களை மீண்டும் அப்பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்கு அனுப்பக் கூடாது என்றும், அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற வரும் பொது மக்களுக்கு நிறைவான சிகிச்சை வழங்க வேண்டும் எனவும் அவர் மருத்துவர்களிடம் வலியுறுத்தினார்.

இதையும் வாசிக்கலாமே...

HBD JYOTHIKA | மறக்க முடியாத நாளும்... மறுத்து... பின் கிடைத்த வாய்ப்பும்!

இந்தியாவைத் தோற்கடிச்சா என் கூட டின்னர் சாப்பிடலாம்... சர்ச்சையைக் கிளப்பிய பிரபல நடிகை!

அதிர்ச்சி... இளம் மல்யுத்த வீராங்கனை தற்கொலை!

வரி ஏய்ப்பு புகார்... தமிழகத்தில் 30 இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு!

சோகம்... எல்லாமே 2000 ரூபாய் நோட்டுக்கள்... 1.50 லட்சத்தை  மாற்ற முடியாமல் தவிக்கும் பெண்மணி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in