சோகம்… கல்லூரி நண்பருடன் பைக்கில் சென்ற மாணவி விபத்தில் பலி!

சோகம்… கல்லூரி நண்பருடன் பைக்கில் சென்ற மாணவி விபத்தில் பலி!

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளகோவிலை சேர்ந்த செல்வக்குமார் என்பவரின் மகள் இந்துமா (20). இவர் கோவையில் உள்ள கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்தார். அதே கல்லூரியில் விஷால் (20) என்பவரும் படித்து வந்ததை அடுத்து, இருவரும் மோட்டார் சைக்கிளில் கல்லூரி சென்றனர்.

அவர்களது பைக் பல்லடம் அருகே காளிவேலம்பட்டி பிரிவில் சென்று கொண்டிருந்த போது, முன்னால் சென்ற ஸ்கூட்டர் மீது மோதாமல் இருக்க விஷால் முயற்சித்த போது, இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இந்த விபத்தில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து இருவரும் பல்லடம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மாணவி இந்துமாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். விஷால் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

விபத்து குறித்து மாணவியின் தந்தை செல்வகுமார் அளித்த புகாரின் பேரில் பல்லடம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலை விபத்தில் கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியிவல் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in