தானே தொழிற்சாலை விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்வு... உரிமையாளர்கள் இருவர் கைது

டோம்பிவிலி தொழிற்சாலை விபத்து
டோம்பிவிலி தொழிற்சாலை விபத்து
Updated on
2 min read

மகாராஷ்டிரா மாநிலம் தானேயின் டோம்பிவிலி நகரத்தில் உள்ள அமுதன் கெமிக்கல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் ஏற்பட்ட வெடிவிபத்து மற்றும் அதையொட்டிய தீ விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை இன்று 13ஆக உயர்ந்துள்ளது.

நேற்று பிற்பகலில் டோம்பிவிலி ரசாயனத் தொழிற்சாலையில் நேரிட்ட விபத்தில் 4 பேர் பலியானார்கள். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ராட்சத விளம்பர பலகை விழுந்த விபத்து மற்றும் உயிர்ப்பலிகளுக்கு பின்னர், டோம்பிவிலி விபத்து மாநிலத்தை உலுக்கியது. இந்த விபத்து சம்பவத்தின் தீவிரம் காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பலியானோர் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்தது.

மீட்பு குழுவினர்
மீட்பு குழுவினர்

இவ்வாறு 24 மணி நேரத்தில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது. இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த அமுதம் கெமிக்கல் பிரைவேட் லிட் ஆலையின் உரிமையாளர்கள் இருவரும் இன்று கைது செய்யப்பட்டனர். இவர்கள் மும்பையில் வசிப்பவர்கள் என்றாலும், விபத்து சம்பவத்தை அடுத்து இருவரும் தலைமறைவானார்கள். போலீஸாரின் தீவிர தேடலில் மாலதி மேத்தா நாசிக்கில் பிடிபட்டார். அவரது மகன் மலாய் மேத்தா தானேவில் உள்ள மறைவிடத்தில் கைது செய்யப்பட்டார்.

தாய், மகன் இருவர் மீதும் ஐபிசி பிரிவு 304 மற்றும் வெடிபொருள் சட்டம் 1884, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இடிபாடுகளில் இருந்து மேலும் பல உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், மகாராஷ்டிரா தொழில் வளர்ச்சிக் கழக வளாகத்தில் உள்ள அமுதன் கெமிக்கல் பிரைவேட் லிமிடெட் தொழிற்சாலையின் எண்ணிக்கை இன்றைய தினம் 13 ஆக உயர்ந்துள்ளது மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தானே தொழிற்சாலை விபத்து
தானே தொழிற்சாலை விபத்து

தொழிற்சாலையில் உள்ள இரசாயன உலையில் ஏற்பட்ட பெரும் தீயைத் தொடர்ந்து வெடிவிபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது. இடிபாடுகளில் சிக்கியவர்களை கண்டறிய மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோர் ஏண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. டோம்பிவிலி மற்றும் அதைச் சுற்றியுள்ள 4 கிமீ சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள மக்கள் புகை, சாம்பல் மற்றும் ரசாயன நெடி காரணமாக 2 தினங்களாக முகக்கவசம் அணிந்தே நடமாடி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

கேன்ஸ் திரைப்பட விழாவில் முதல் பரிசு வென்ற இந்திய குறும்படம்... ரசிகர்கள் வாழ்த்து!

வேலை வாங்கி தருவதாக லட்சக்கணக்கில் மோசடி; முன்னாள் பாஜக நிர்வாகி கைது!

அதிர்ச்சி... சிலிண்டர் வெடித்து எரிவாயு கசிவு; 89 பேர் மருத்துவமனையில் அனுமதி!

கட்டுக்கட்டாக பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்... அதிமுக பிரமுகர் கைது!

ப்ரேக்-அப்... அடுத்த ரிலேஷன்ஷிப்பிற்கு ரெடி... மெளனம் கலைத்த ஸ்ருதிஹாசன்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in