அதிர்ச்சி... சாலையில் இறந்துகிடந்த பெண் சிறுத்தை!

சிறுத்தை மரணம்
சிறுத்தை மரணம்

கர்நாடக மாநிலம் சரகூரு தாலுகாவில் வாகனம் மோதி 4 வயது சிறுத்தை உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

மைசூரு மாவட்டம் சரகூரு தாலுகா செங்கவுடனஹள்ளி கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இதனால் அவ்வப்போது சிறுத்தை, புலி, காட்டுயானை போன்ற விலங்குகள் வனப்பகுதியில் இருந்து இரைதேடி கிராமத்தில் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இதனால் கிராமமக்கள் பீதியில் இருந்து வருகிறார்கள். கடந்த சில நாட்களாக சிறுத்தை ஒன்று ஒன்று வெளியேறி செங்கவுடனஹள்ளி கிராமத்தில் உலா வந்துள்ளது. இதனை வனத்துறையினரிடம் கிராம மக்கள் புகாராக அளித்துள்ளனர்.

சிறுத்தை
சிறுத்தை

இதையடுத்து, கிராமமக்களின் கோரிக்கையை ஏற்று சிறுத்தையை கூண்டு வைத்து பிடிப்பதாக வனத்துறையினர் உறுதி அளித்தனர். இந்தநிலையில், நேற்று முன்தினம் செங்கவுடனஹள்ளி கிராமம் அருகே எடியால் சாலையில் சிறுத்தை ஒன்று உயிரிழந்து கிடந்தது. அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு கால்நடை மருத்துவருடன் வந்து பார்வையிட்டனர். பின்னர் அந்த சிறுத்தையை பிரேத பரிசோதனை செய்து வனப்பகுதியில் குழிதோண்டி புதைத்தனர்.

விசாரணையில், 4 வயது பெண் சிறுத்தை சாலையை கடக்க முயன்றபோது வாகனம் மோதி உயிரிழந்தது தெரியவந்தது. சமீப காலங்களில் வாகனம் மோதி சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் இறக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in