அதிர்ச்சி... எக்ஸ்லேட்டரில் சிக்கிய கால்; உயிர் தப்பிய பிரபல ஷெஃப் வெங்கடேஷ் பட்டின் மகள்

ஷெஃப் வெங்கடேஷ் பட்
ஷெஃப் வெங்கடேஷ் பட்

சென்னையில் பிரபல தனியார் மாலில் எக்ஸ்லேட்டரில் கால் சிக்கி பிரபல சமையல் கலைஞர் வெங்கடேஷ் பட்டின் மகள் உயிர் தப்பியுள்ளார்.

பிரபல சமையல் கலை நிபுணர் ஷெஃப் வெங்கடேஷ் பட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நேற்று சென்னை வேளச்சேரி பீனிக்ஸ் மாலுக்கு தனது மகளை அழைத்துச் சென்றதாகவும் அங்கு எக்ஸ்லேட்டர் படியில் ஏறிச் செல்லும் போது திடீரென எக்ஸ்லேட்டர் படிகளுக்கு இடையே தனது மகள் கால் செருப்புடன் சிக்கி விபத்து ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார். மிகவும் கடின தன்மையுடைய விலையுயர்ந்த காலணி எக்ஸ்லேட்டரில் சிக்கி துண்டானதாகவும் இதில் தனது மகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக வீடியோவில் தெரிவித்துள்ளார்.

ஷெஃப் வெங்கடேஷ் பட்
ஷெஃப் வெங்கடேஷ் பட்

இந்த விபத்து நடக்கும் போது உடனடியாக எக்ஸ்லேட்டரை நிறுத்த எந்தவித உதவியும் ஊழியர்கள் தரப்பில் செய்யவில்லை என குற்றம் சாட்டியுள்ளார். இதுபோன்று விபத்து ஏற்படும் போது அவசரமாக எக்ஸ்லேட்டரை நிறுத்தும் வசதிகள் இல்லை என தெரிவித்துள்ள வெங்கடேஷ் பட், இதுகுறித்து மால் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளதாக தனது வீடியோ பதிவில் குறிப்பிட்டுள்ளார். எனவே பீனிக்ஸ் மாலுக்கு குழந்தைகளை அழைத்து வரும் பெற்றோர்கள் எக்ஸ்லேட்டரை கவனமாக பயன்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in