`படம் வரையாதே, ஒழுங்கா படி'- தாய் கண்டித்ததால் உயிரை மாய்த்த மகள்

`படம் வரையாதே, ஒழுங்கா படி'- தாய் கண்டித்ததால் உயிரை மாய்த்த மகள்

படிக்காமல் வீட்டில் வரைபடம் வரைந்து கொண்டிருந்த மகளை தாய் கண்டித்துள்ளார். இதனால் வேதனையடைந்த மகள் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

சென்னை அடுத்த திருவேற்காடு, சின்ன கோலடி பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவரின் மகள் ஜனனி (11). இவர், அங்குள்ள பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு படிக்காமல் வீட்டில் வரைபடம் வரைந்து கொண்டிருந்ததை அவரது தாய் சரண்யா கண்டித்துள்ளார். இதனால், மனமுடைந்த ஜனனி தூக்குப் போட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவரை மீட்டு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றின்று சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவேற்காடு காவல் துறையினர், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். தாய் கண்டித்ததால் மகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் இந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related Stories

No stories found.