பட்டியலின இளைஞரை செருப்பால் அடித்த கிராமத்தலைவர்கள்: வெளியானது அதிர்ச்சி வீடியோ!

பட்டியலின இளைஞரை செருப்பால் அடித்த கிராமத்தலைவர்கள்: வெளியானது அதிர்ச்சி வீடியோ!

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் பட்டியலின இளைஞரை கிராமத் தலைவர்கள் செருப்பால் அடித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் பட்டியலினத்தைச் சேர்ந்த தினேஷ் குமாரை (27) தாஜ்பூர் கிராமத் தலைவர் சக்தி மோகன் குர்ஜார் மற்றும் ரெட்டா நாக்லா கிராமத்தின் முன்னாள் தலைவர் கஜே சிங் ஆகியோர் செருப்பால் அடித்து கொலை மிரட்டல் விடுத்த அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவில் காலில் விழும் இளைஞரை ஒருவர் செருப்பால் அடிக்கிறார். மற்றொருவரும் அந்த இளைஞரை அடித்து விரட்டுகிறார்.

பட்டியலின இளைஞரை தாக்கிய இருவர் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக முசாபர் நகர் காவல் கண்காணிப்பாளர் அர்பித் விஜய்வர்கியா தெரிவித்தார். இதில் கிராமத் தலைவர் சக்தி மோகனை போலீஸார் கைது செய்துள்ளனர். இரண்டாவது குற்றவாளியை போலீஸார் தேடி வருகின்றனர்.

இந்த சம்பவத்தை கண்டித்து, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி, பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்களுடன் பீம் ஆர்மி தொண்டர்கள் சப்பார் காவல் நிலையத்திற்கு வெளியே முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த கிராமத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in