
கர்நாடகாவில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், தந்தை, மகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விஜயநகர் மாவட்டம் தாலுகா குந்தேகோட்டை பகுதியைச் சேர்ந்த கோவிந்தா (30) என்பவர் தனது மனைவி மற்றும் மகளுடன் இருசக்கர வாகனத்தில் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றார்.
அவர் அந்த பகுதியில் உள்ள ஏரிக்கரை அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரில் வந்த இருசக்கர வாகனம் ஒன்று இவரது வாகனத்தில் எதிர்பாராத விதமாக மோதியது.
இதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட கோவிந்தா மற்றும் அவரது மகள் ரிஷி ஆகிய இரண்டு பேரும் படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போதும், அவர்கள் வழியிலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக கூட்டுலகி நகர போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்