ஆட்டுக்கறி வாங்க வந்தவர்கள் இடையே அறிபறி... தட்டிக்கேட்ட கறிக்கடைக்காரரால் ஒருவர் வெட்டிக்கொலை!

வெட்டிக்கொலை
வெட்டிக்கொலை

ஆட்டுக்கறி வாங்க வந்த வாடிக்கையாளர்கள் இடையிலான பிரச்சினையில் பஞ்சாயத்து மேற்கொள்ளும் முயற்சி விபரீதமானதில், கறிக்கடைக்காரரால் வெட்டுப்பட்டு வாடிக்கையாளரில் ஒருவர் பலியாகி இருக்கிறார். மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.

நாக்பூரின் சாய் நகரில் வசிப்பவ மகேந்திர ராம். நேற்று மதியம் கறி வாங்குவதற்காக அப்பகுதியில் உள்ள இறைச்சிக் கடைக்கு சென்றிருக்கிறார். கறிக்கடையில் கறிக்காக காத்திருக்கையில், ஏற்கனவே அறிமுகமான ஒருவரை சந்தித்து மகேந்திர ராம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது முன்விவகாரம் ஒன்று தொடர்பான பேச்சில் இருவருக்கும் இடையே வார்த்தைகள் தடித்தன. அதே வேகத்தை யார் முதலில் கறியை வாங்குவது என்பதில் இருவரும் மும்முரம் காட்டினார்கள்.

வாடிக்கையாளர் இடையிலான பிரச்சினையை தீர்க்க கறிக்கடையில் பணிபுரியும் ஷேக் ரெஹ்மான் என்ற 22 வயது இளைஞர் முயன்றார். இரு வாடிக்கையாளர் இடையிலான மோதல், யார் முதலில் கறியை வாங்கிச் செல்வது என்ற ஈகோ பிரச்சினையாக மாறவே ஷேக் ரெஹ்மான் பாடு திண்டாட்டமானது. அந்த பிரச்சினையில் சுமூக முடிவுக்காக தீர யோசித்த ஷேக் ரெஹ்மான், முதலில் வந்தவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் மகேந்திர பாபுக்கு முன்பாக கடைக்கு வந்த நபருக்கு கறியை வழங்கி அனுப்பி வைத்தார்.

வெட்டிக்கொலை
வெட்டிக்கொலை

இதனால் ஷேக் ரெஹ்மான் மீது கோபம் கொண்ட மகேந்திர பாபு, இப்போது அவரிடம் தனது சண்டையை ஆரம்பித்தார். சாதாரண வாக்குவாதமாக தொடங்கிய மோதல், கைகலப்பில் இறங்கியது. இதில் கையில் சிக்கிய கறிவெட்டும் கத்தியை எடுத்து ஷேக் ரெஹ்மானை, மகேந்திரபாபு தாக்கினார். இதனால் காயமடைந்த ஷேக் ரெஹ்மான் ஆத்திரத்தில், கறிக்கடையில் இருக்கும் இறைச்சி வெட்டும் கூரான கருவியால் பதிலுக்குத் தாக்கினார்.

இந்த தாக்குதலில் தலை மற்றும் மார்பு ஆகிய இடங்களில் வெட்டுக்காயத்துடன் மகேந்திர பாபு மயங்கி விழுந்தார். அவரை ஷேக் ரெஹ்மானே அவசரமாக மருத்துவமனையில் கொண்டுபோய் சேர்த்தார். ஆனால் மகேந்திர பாபு ஏற்கனவே இறந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து, வாடிக்கையாளரை வெட்டிக் கொன்றதாக கறிக்கடைக்காரரான ஷேக் ரெஹ்மானை கைது செய்த ஹட்கேஷ்வர் போலீஸார், கறிக்கடை மோதலில் ஈடுபட்ட இன்னொரு வாடிக்கையாளரை தேடி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in