கவுரவக்கொலை
கவுரவக்கொலை

அதிர்ச்சி... காதல் திருமணம் செய்த தம்பதி கவுரவக்கொலை... பெண்ணின் தந்தை, சகோதரர் கைது!

மதம் மாறி காதல் திருமணம் செய்த மகள் மற்றும் மருமகனை வீட்டிற்கு அழைத்து கவுரவக் கொலை செய்த பெண்ணின் தந்தை, சகோதரர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்ட சம்பவம் மும்பையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கவுரவக்கொலை
கவுரவக்கொலை

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த குல்னாஸ் என்ற இளம்பெண் கரண் ரமேஷ் சந்திரா(22) என்பவரை காதலித்து வந்தார். முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த குல்னாஸ், இந்து மதத்தைச் சேர்ந்த கரணை காதலிப்பதற்கு குல்னாஸ் குடும்பம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.இந்த நிலையில், குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி கரணை குல்னாஸ் திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து அவர்கள் இருவரும், மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு குடி பெயர்ந்தனர்.

தனது எதிர்ப்பை மீறி மகள் மதம் மாறி திருமணம் செய்ததால், அவளையும், அவரது கணவரையும் கொலை செய்ய குல்னாஸின் தந்தை ரயீசுதீன் கான் (50) உள்ளிட்ட குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதற்காக மும்பை சென்ற அவர், மும்பையில் தான் கட்டும் புதிய வீட்டைக் காண வருமாறு மகளையும், மருமகனையும் அழைத்துள்ளார்.இதை நம்பி குல்னாஸ் தனது கணவருடன் அங்கு சென்றார்.

கவுரவக்கொலைக்கு எதிர்ப்பு
கவுரவக்கொலைக்கு எதிர்ப்பு

இந்த நிலையில், அக்.14-ம் தேதி மும்பை கோவண்டி காவல் நிலையப்பகுதியில் உள்ள கிணற்றில் கரண் ரமேஷ் சந்திராவின் உடலை போலீஸார் கைப்பற்றினர். அவர் கொலை செய்யப்பட்டது உடல் கிணற்றில் வீசப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது. இந்த கொலையில் ரயீசுதீன் கான் மீது போலீஸார் சந்தேகப்பட்டனர்.

அவரைப் பிடித்து விசாரணை நடத்திய போது, கரண் ரமேஷ் சந்திராவை வெட்டிக் கொன்ற பிறகு தனது மகள் குல்னாஸை குத்திக் கொன்று அவரது உடலை நவி மும்பையில் அப்புறப்படுத்தியதும் தெரிய வந்தது. மும்பையை ஒட்டியுள்ள நவி மும்பையில் உள்ள வெறிச்சோடிய இடத்தில் இருந்து குல்னாஸின் உடலை போலீஸார் மீட்டுள்ளனர்.

தனது மகள், மருமகனை கவுரவக் கொலை செய்த ரயீசுதீன் கானை மும்பை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த கவுரவக் கொலைகளை கோரா கானின் மகன் சல்மான் கான்(22), அவரது நண்பர்கள் முகமது கைஃப், நௌஷாத் கான் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் சேர்ந்து செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து குல்னாஸின் சகோதரர் சல்மான் கான் உள்ளிட்ட 5 பேரை போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர். மதம் மாறி காதல் திருமணம் செய்த மகளுடன், அவரது கணவரையும் கருணைக் கொலை செய்த குடும்பத்தினரின் நடவடிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

HBD JYOTHIKA | மறக்க முடியாத நாளும்... மறுத்து... பின் கிடைத்த வாய்ப்பும்!

இந்தியாவைத் தோற்கடிச்சா என் கூட டின்னர் சாப்பிடலாம்... சர்ச்சையைக் கிளப்பிய பிரபல நடிகை!

அதிர்ச்சி... இளம் மல்யுத்த வீராங்கனை தற்கொலை!

வரி ஏய்ப்பு புகார்... தமிழகத்தில் 30 இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு!

சோகம்... எல்லாமே 2000 ரூபாய் நோட்டுக்கள்... 1.50 லட்சத்தை  மாற்ற முடியாமல் தவிக்கும் பெண்மணி!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in