குவியல், குவியலாக பிடிபட்ட துப்பாக்கிகள்... வடமாநில தேர்தலைச் சீர்குலைக்க சதி?

பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகள்
பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகள்

மத்திய பிரதேச மாநிலத்தில் போலீஸார் நடத்திய அதிரடி ஆய்வின் போது சட்டவிரோதமாக துப்பாக்கிகளைத் தயாரித்து விற்பனை செய்து வந்த மூன்று நபர்களை கைது செய்துள்ளனர்.

இந்தியாவில் விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் முன்னதாக மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ளது. இதையொட்டி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போலீஸாரும், பாதுகாப்புத்துறையினரும் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

தார் மாவட்டத்தில் போலீஸார் நடத்திய சோதனை
தார் மாவட்டத்தில் போலீஸார் நடத்திய சோதனை

இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் போலீஸார் நடத்திய அதிரடி ஆய்வு போது மாநிலங்களுக்கு இடையே கள்ளத் துப்பாக்கிகளை விற்பனை செய்து வந்த கும்பலை கைது செய்துள்ளனர்.

இது தொடர்பாக மூன்று பேரை கைது செய்துள்ள போலீஸார், 149 நாட்டுத் துப்பாக்கிகள், 2 துப்பாக்கிகள் உள்ளிட்ட 36 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். இந்த கும்பல் குஜராத், ராஜஸ்தான், டெல்லி, ஹரியாணா ஆகிய மாநிலங்களில் இயங்கி வந்ததாகவும், இந்த கும்பலின் முக்கிய நபராக கருதப்படும் ஈஸ்வர் என்பவர் மீது 24 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.

இந்த ஈஸ்வர் இந்த கள்ளத் துப்பாக்கிகளை எங்கெல்லாம் விற்பனை செய்திருக்கிறார் என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர். தேர்தல் காலத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதற்காக இந்த கள்ளத் துப்பாக்கிகளை விற்பனை செய்ய வைத்திருந்தனரா என்ற கோணத்தில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

300 பேரைக் காணவில்லை... பெட்ரோல் மையத்தில் பயங்கர வெடிவிபத்து... பலி எண்ணிக்கை 68 ஆனது!

அதிர்ச்சி.... 7-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை!

ரூ.1.70 கோடி ஏமாற்றி விட்டார்... கட்டிடப் பொறியாளர் மீது நடிகர் பாபி சிம்ஹா பரபரப்பு புகார்!

வைரலாகும் புகைப்படம்... 'மாமன்னன்' பாணியில் அவமானப்படுத்தினாரா அமைச்சர் பொன்முடி?

அடேயப்பா... பிக் பாஸ் இந்த சீசனில் கமல்ஹாசனின் சம்பளம் 130 கோடி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in