
சென்னை கூவம் ஆற்றில் பிறந்து 10 நாட்களே ஆன பச்சிளங்குழந்தை சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. குழந்தையை வீசி சென்ற நபர் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை கோயம்பேடு அருகே உள்ள கூவம் ஆற்றங்கரை ஓரம் அழுகிய நிலையில் குழந்தை சடலம் ஒன்று கிடப்பதாக அப்பகுதி மக்கள் தீயணைப்பு மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த திருமங்கலம் போலீஸார் மற்றும் கோயம்பேடு தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி கூவம் ஆற்றில் அழுகிய நிலையில் கிடந்த பச்சிளம் குழந்தையின் உடலை மீட்டனர். பின்னர் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து திருமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிறந்து 10 நாட்களான பச்சிளம் குழந்தை கூவம் ஆற்றில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
பிஎஸ்சி படித்தவர்களுக்கு ரூ.1,40,000 சம்பளத்தில் விமான நிலையத்தில் வேலை!
லீக்கானது ‘லியோ' படத்தின் கதை... படக்குழுவினர் அதிர்ச்சி!
பெற்றோரிடம் ரூ.2 லட்சம் பேரம்; குழந்தையை விற்க முயற்சி- அரசு மருத்துவர் பணியிடை நீக்கம்
பிரபஞ்ச அழகிப் போட்டியில் புதுமை... 2 திருநங்கைகள் பங்கேற்பு!
எனக்கு அதைத் திருடுற பழக்கம் இருக்கு... நடிகை கீர்த்தி சுரேஷ்!