அயோத்தி ராமர் கோயிலில் துப்பாக்கி வெடித்தது... தெறித்து ஓடிய பக்தர்களால் பரபரப்பு!

அயோத்தி ராமர் கோயிலில் துப்பாக்கி வெடித்தது... தெறித்து ஓடிய பக்தர்களால் பரபரப்பு!

அயோத்தி ராமர் கோயிலில் பாதுகாப்பு பணியில் நின்றிருந்த காவலர் தனது துப்பாக்கியை சுத்தம் செய்தபோது திடீரென வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அயோத்தி ராமர் கோயில்
அயோத்தி ராமர் கோயில்

உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோயில் திறப்பு விழா, கடந்த ஜனவரி 22-ம் தேதி நடைபெற்றது. இந்த கோயிலை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அதன் பிறகு பக்தர்களின் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் இருக்கக்கூடிய ராம பக்தர்கள், அயோத்தி ராமர் கோயிலுக்கு வருகை புரிந்து தரிசனம் பெற்று செல்கின்றனர்.

நாளுக்கு நாள் பக்தர்களின் வருகை அதிகரிப்பால், கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக ராமர் கோயில் வளாகத்தில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இன்று கோயில் வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த ஒரு காவலரின் துப்பாக்கியில் இருந்து குண்டு வெளியேறியதால், பரபரப்பு ஏற்பட்டது. பயங்கர சத்தத்துடன் துப்பாக்கி முழங்கியதால் அங்கிருந்த பக்தர்கள் பதறி அடித்து நாலாபுறமும் ஓடினர்.

ராமர் கோயிலில் போலீஸ் பாதுகாப்பு
ராமர் கோயிலில் போலீஸ் பாதுகாப்பு

துப்பாக்கி குண்டு பாய்ந்து காயமடைந்த காவலரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு உடனடியாக அருகில் உள்ள அயோத்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். காவலரின் மார்பின் இடதுபுறம் தோட்டா பாய்ந்துள்ளதாகவும், தோட்டா ஆழமாக இறங்கியுள்ளதாகவும், நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, அவர், மேல் சிகிச்சைக்காக லக்னோவில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

விசாரணையில், அயோத்தி ராமர் கோயிலில் பாதுகாப்பு அதிகாரியாக கடந்த 6 மாதங்களாக ராம் பிரசாத் என்பவர் இருந்து வந்துள்ளார். இன்று அவரது துப்பாக்கியை சுத்தம் செய்தபோது, எதிர்பாராதவிதமாக துப்பாக்கியின் குண்டு சீறி அவரது உடம்பில் பாய்ந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். எப்போதும் பரபரப்பாக இருக்கும் அயோத்தி ராமர் கோயிலில் துப்பாக்கி சூடு சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் வாசிக்கலாமே...  


ராதிகாவுக்கு எதிராக பாஜக நிர்வாகி வேட்புமனு தாக்கல்... விருதுநகரில் வெடித்தது உட்கட்சி பூசல்!

கலங்கிய அண்ணாமலை... கிணறு வெட்ட பூதம் கிளம்பிடுச்சு... மொத்த ஜோலியையும் முடிக்க மெகா திட்டம்!

நான் பேசும்போது எழுந்து போனால் ரத்தம் கக்கி சாவீர்கள்... செல்லூர் ராஜு லகலக!

திடீரென மயங்கிய அமைச்சர் நேரு... பிரச்சாரம் பாதியிலேயே ரத்து... பதறிய தொண்டர்கள்!

சென்னையில் பரபரப்பு... ரயிலில் பண்டல், பண்டலாக கஞ்சா கடத்தி வந்த பெண் பத்திரிகையாளர் கைது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in