மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமைக் காவலர் கைது!

சென்னை எம்ஆர்சி நகர் போலீஸார் நடவடிக்கை
மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமைக் காவலர் கைது!

சென்னை, ஐயப்பன்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் குமரன்(50). இவர், எஸ்ஆர்எம்சி போக்குவரத்து காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகின்றார்.

இவருக்குத் திருமணமாகி 17 மற்றும் 12 வயதில் 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், நேற்று மதியம் குமரன் பணிமுடிந்து வீட்டிற்குச் செல்லும் வழியில் மது அருந்தியுள்ளார். அதன் பின்னர், எஸ்ஆர்எம்சி கல்லூரி எதிரே உள்ள தனியார் ஓட்டலுக்குச் சாப்பிடச் சென்றுள்ளார்.


ஓட்டலில் தனியார் கல்லூரி மாணவிகள் சிலர் உணவு அருந்த வந்திருந்தனர். அப்போது மதுபோதையில் அங்கிருந்த கல்லூரி மாணவி ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். உடனே பொதுமக்கள் காவலரைக் கண்டித்து ஓட்டலிலிருந்து வெளியே அனுப்பினர்.


இச்சம்பவம் குறித்து கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட மாணவி, எஸ்ஆர்எம்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீஸார், காவலர் குரமன் மீது பொது இடத்தில் ஆபாசமாக நடத்தல், வன்முறை தாக்குதல், மிரட்டல், பெண்கள் வன்கொடுமை சட்டம் உட்பட 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து காவலர் குமரனைக் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in