
நீலகிரி மாவட்டம் குன்னூர் பள்ளத்தாக்கில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு
தென்காசி மாவட்டத்திலிருந்து ஊட்டிக்கு தனியார் பேருந்து மூலம் சுற்றுலாவிற்கு சென்றவர்கள் நேற்று தென்காசிக்கு திரும்பும் வழியில் பேருந்து நீலகிரி மாவட்டம், குன்னூர் பர்லியாறு அருகே வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.
இந்த விபத்தில் பேருந்து பயணம் செய்த முப்புடாதி (67), முருகேசன் (65), இளங்கோ (64), தேவிகா (42), கௌசல்யா (29) மற்றும் நிதின் (15) ஆகியோர் உள்ளிட்ட எட்டு பேர் நேற்று உயிரிழந்த நிலையில் இன்று காலை பாண்டித்தாய் என்பவரது உடல் மீட்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பலரின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் வாசிக்கலாமே...
இன்று முதல் அமலுக்கு வரும் புதிய திட்டங்கள், கட்டுப்பாடுகள் இவை தான்!
'நடிகர் திலகம்’ சிவாஜி கணேசன் பிறந்தநாள் ஸ்பெஷல்: ‘பராசக்தி’ முதல் ‘படையப்பா’ வரை!
எல்ஐசி ஹைட்டு... எடப்பாடியார் வெயிட்டு!
‘ஆடியோ லாஞ்ச் கேன்சல்’ அதிமுகவைத் தேடிப்போன அண்ணாமலை!
நாளை தமிழகம் முழுவதும் 12,525 ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம்!