
குன்னூர் கோர விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டத்திலிருந்து ஊட்டிக்கு தனியார் பேருந்து மூலம் சுற்றுலாவிற்கு சென்றவர்கள் நேற்று தென்காசிக்கு திரும்பும் வழியில் பேருந்து நீலகிரி மாவட்டம், குன்னூர் பர்லியாறு அருகே வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் 9 பேர் பலியாகியுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் இரங்கல் தெரிவித்து, நிவாரணம் அறிவித்துள்ளார். அதில், ‘’தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே பேருந்து விபத்துக்குள்ளானதில் பலர் உயிர் இழந்தது வேதனை அளிக்கிறது. என் எண்ணங்கள் இறந்த குடும்பங்களுடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். உதவித் தொகையாக இறந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும், பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ரூ. 2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 வழங்கப்படும்’’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
இன்று முதல் அமலுக்கு வரும் புதிய திட்டங்கள், கட்டுப்பாடுகள் இவை தான்!
'நடிகர் திலகம்’ சிவாஜி கணேசன் பிறந்தநாள் ஸ்பெஷல்: ‘பராசக்தி’ முதல் ‘படையப்பா’ வரை!
எல்ஐசி ஹைட்டு... எடப்பாடியார் வெயிட்டு!
‘ஆடியோ லாஞ்ச் கேன்சல்’ அதிமுகவைத் தேடிப்போன அண்ணாமலை!
நாளை தமிழகம் முழுவதும் 12,525 ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம்!