ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு, அரசு விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவ மாணவிகள் சரக்கு வேனில் உரிய பாதுகாப்பின்றி அழைத்துவரப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான ’வாழ்க்கை வழிகாட்டி’ நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதற்காக ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு விடுதிகளில் தங்கி இருக்கும் மாணவ, மாணவிகள் ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
அப்போது ஒரு சரக்கு வேனில் பள்ளி சீருடையில் இருந்த மாணவிகள் சிலர் அழைத்து வரப்பட்டனர். ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு அவர்கள் சரக்கு வேனில் இருந்து இறக்கி விடப்பட்டனர்.
இந்த காட்சியை அவ்வழியாக சென்ற ஒருவர் புகைப்படமாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பள்ளிக்கூட மாணவிகளை எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் சரக்கு வேனில் ஏற்றி சென்றதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை மேற்கொண்டு, மாணவிகளை அழைத்து வந்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் இது போன்ற அரசு நிகழ்ச்சிகளுக்கு அழைத்து வரும்போது, உரிய பாதுகாப்புடன் மாணவ, மாணவிகளை அழைத்து வருவதை, பள்ளி கல்வித்துறை உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...
கோடிக்கணக்கில் பணம், தங்கம், வைரம் பறிமுதல்... தெறிக்கவிட்ட தேர்தல் பறக்கும் படை!
அதிர்ச்சி! தவறான சிகிச்சையால் +2 மாணவன் உயிரிழப்பு... மருத்துவர் கைது!
80 வயது முதியவரை 26 வயது இளைஞனாக்கலாம்… விஞ்ஞானிகள் சாதனை!
தேனியில் பரபரப்பு.. கவுன்சிலர்களின் பிச்சை எடுத்து போராட்டம்!
பிக் பாஸ் நிக்சனின் சில்மிஷ வீடியோ... போட்டியாளர்கள் அதிர்ச்சி!