நெல்லை மாவட்டம் மேல திடியூர் பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது. இங்கு பொறியியல் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளுக்கான கல்லூரிகளும் அருகருகே அமைந்துள்ளது. இந்தக் கல்லூரியில் கடந்த சில மாதங்களாக கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.
கட்டுமான பணியில் ஈடுபடும் சில தொழிலாளர்கள் கல்லூரி வளாகத்திலேயே தங்கி பணி செய்து வருகின்றனர். இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் சந்தை அடுத்த நெய்யூர் /சுனைப்பாறை பகுதியைச் சேர்ந்த ஜூலியஸ் குமார்(41) என்பவரும் அதே கல்லூரி வளாகத்தில் தங்கி இருந்து பணி செய்து வருகிறார்.
இவர் கான்கிரீட் கம்பி கட்டும் பணிக்கு மேஸ்திரியாக கட்டுமான பணியில் வேலை செய்து வருகிறார். ஜூலியஸ் குமாருடன் ஏழு பேர் கல்லூரி வளாகத்தில் தங்கி இருந்து வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்றைய தினம் தீபாவளி பண்டிகை என்பதால் அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மது அருந்தியதாக தெரிகிறது. அப்போது ஜூலியஸ் குமாருக்கும் அங்கிருந்த சிலருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு கைகலப்பு நடந்ததாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மீதமுள்ள நபர்கள் சண்டையில் ஈடுபட்டவர்களை தடுத்து நிறுத்தி சமாதனபடுத்தி இரவு வழக்கமாக தங்கும் இடத்திற்கு தூங்க சென்றுள்ளனர்.
காலையில் எழுந்து பார்த்தபோது ஜூலியஸ் குமார் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் சடலமாக இருந்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த உடன் இருந்தவர்கள் கல்லூரி காவலாளி மூலம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த நெல்லை மாவட்டம் முன்னீர் பள்ளம் காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்து, கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். ஜூலியஸ் குமார் தங்கியிருந்த அறை அருகே இருந்து ரத்த கறையுடன் அரிவாள் ஒன்றும் போலீஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும் சம்பவ இடத்திற்கு காவல்துறை மோப்பநாய் வரவழைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும்படியும் தீவிர படுத்தப்பட்டுள்ளது. தடய அறிவியல் துறையினரும் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு கொலை குற்றத்துக்கான தடையங்கள் குறித்து ஆய்வு நடத்திய அதனையும் சேகரித்துள்ளனர்.
ஜூலியஸ் குமாருடன் அறையில் தங்கி இருந்த 3 நபர்கள் மாயமான நிலையில் கொலை சம்பவத்திற்கும் அவர்களுக்கும் எதுவும் தொடர்பு உள்ளதா என்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் உயிரிழந்த நபருடன் அறையில் தங்கி இருந்த மேலும் இருவரிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. கல்லூரி வளாகத்தில் கட்டுமான பணிக்காக வந்த நபர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
சேலையில் ஜொலிக்கும் கீர்த்தி சுரேஷ்!
தெறிக்க விட்ட மதுரைக்காரைங்க... டாஸ்மாக்கில் தீபாவளி வசூல் ரூ.467 கோடி!
ஆந்திராவை அலற வைக்கும் ஜட்டி கேங்...போலீஸார் எச்சரிக்கை!
பகீர் வீடியோ... மதுவை புகட்டி இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்!
அம்மா மினி கிளினிக் அவ்வளவுதான்... முடித்து வைத்தார் மா.சுப்ரமணியன்!