தண்டவாளத்தில் இருந்த பாறாங்கற்கள்.
தண்டவாளத்தில் இருந்த பாறாங்கற்கள்.

பகீர்... பாறாங்கற்களை வைத்து ரயிலை கவிழ்க்க சதி.. பயணிகள் அதிர்ச்சி

புணே- மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலைக் கவிழ்ப்பதற்காக தண்டவாளத்தில் பாறாங்கற்கள் வைக்கப்பட்ட சம்பவம் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தண்டவாளம்.
தண்டவாளம்.

மகாராஷ்டிரா மாநிலம், புணே அருகே உள்ள அகுர்டி மற்றும் சின்ச்வாட் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் தண்டவாளத்தில் நேற்று பாறாங்கற்கள் இருப்பதைப் பார்த்த ரயில்வே காவலாளி அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து உடனடியாக அவர் தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து சின்சவாட் ஸ்டேஷன் மாஸ்டருகக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கிருந்து அந்த தண்டவாளத்தில் வந்த நாகர்கோவில் -மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் (சிஎஸ்எம்டி) எக்ஸ்பிரஸின் லோகோ பைலட்டுக்கு நிலையம் எச்சரிக்கை செய்தது.

விபத்தில் இருந்து தப்பித்த ரயில்
விபத்தில் இருந்து தப்பித்த ரயில்

இதையடுத்து தண்டவாளத்தில் இருந்த பாறாங்கற்கள் அகற்றப்பட்ட பின்பு அந்த ரயில் பயணத்தைத் தொடர்ந்தது. இந்த சம்பவம் குறித்து ரயில்வே காவல் துறை (ஜிஆர்பி) மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை(ஆர்பிஎஃப்) இணைந்து மர்மநபர்களைத் தேடி வருகின்றனர். சரியான நேரத்தில் ரயில்வே காவலாளி சொன்ன தகவலால் பெரும் ரயில் விபத்து தடுக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் நிம்மதியடைந்தனர்.

கடந்த அக்.2-ம் தேதி ஜெய்ப்பூர்- உதய்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை இதே போல கவிழ்க்க சதி நடைபெற்றது. தண்டவாளத்தில் கற்கள் மற்றும் உலோக கம்பிகளை மர்மநபர்கள் வைத்திருந்தனர்.

ராஜஸ்தானில் உள்ள சித்தோர்கர் அருகே உள்ள கங்ரார் மற்றும் சோனியானா ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் ஓட்டுநர் அவசர காலபிரேக்கை அடித்ததால் விபத்து தவிர்க்கப்பட்டது. இதன் பின் தண்டவாளத்தில் இருந்த தடைகளை அகற்றிய பின் ரயில் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

கட்டுக்கட்டாக பணம்... அள்ள அள்ள ஆவணங்கள்... திமுக எம்.பி., ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் 3வது நாளாக ரெய்டு!

சோகம்... காதல் திருமணம் செய்த மகன்... மனமுடைந்த பெற்றோர் தற்கொலை!

கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை! உருக்கமான கடிதம் சிக்கியது!

பகீர் வீடியோ... காதலியின் கண் முன்னே கொலை செய்யப்பட்ட கவிஞர்!

அதிர்ச்சி... பள்ளத்திற்குள் பஸ் கவிழ்ந்து 3 குழந்தைகள் உள்பட 16 பேர் பலியான சோகம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in