தொடர்மழையால் இடிந்து விழுந்த உழவர் சந்தை சுற்றுச்சுவர் - குன்னூரில் பரபரப்பு!
நீலகிரி மாவட்டம் குன்னூரில் உழவர் சந்தை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் சேதமடைந்தது.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடந்த 2001ம் ஆண்டு கட்டப்பட்டு தற்போது பயன்பாட்டில் இருந்து வரும் உழவர் சந்தையை சுற்றிலும், சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக நீலகிரியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நிலச்சரிவுகள் மற்றும் பழமையான கட்டிடங்கள் சேதம் அடையும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் குன்னூர் உழவர் சந்தையின் சுற்றுச்சுவர் பலவீனமாக இருந்துள்ளது. நேற்றும், இன்றும் மழை இன்றி வெயில் அடித்தது. இந்த நிலையில் இன்று உழவர் சந்தையின் சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் சுவர் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் சேதமடைந்தது. நல்வாய்ப்பாக அந்த பகுதியில் சுற்றுச்சுவர் இடிந்து விழும்போது, மக்கள் யாரும் இல்லாததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

உடனடியாக இந்த உழவர் சந்தையின் சுற்றுச்சுவரை சீரமைத்து தரவேண்டும் எனவும் பாதுகாப்பு கருதி தற்காலிக வேலி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உழவர் சந்தை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தும்போது, சுற்றுச்சுவர் போன்ற பகுதிகளில் இருந்து சில அடி தூரம் தள்ளியே வாகனங்களை நிறுத்த வேண்டும் என வருவாய் துறையினர் எச்சரித்து வருகின்றனர்.
மேலும் சேதமடையும் நிலையில் உள்ள கட்டிடங்கள், சுற்றுச்சுவர்கள் உள்ளிட்டவற்றை சம்பந்தப்பட்ட இடத்தின் உரிமையாளர்களே சீரமைத்து பராமரிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...
சேலையில் ஜொலிக்கும் கீர்த்தி சுரேஷ்!
தெறிக்க விட்ட மதுரைக்காரைங்க... டாஸ்மாக்கில் தீபாவளி வசூல் ரூ.467 கோடி!
ஆந்திராவை அலற வைக்கும் ஜட்டி கேங்...போலீஸார் எச்சரிக்கை!
பகீர் வீடியோ... மதுவை புகட்டி இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்!
அம்மா மினி கிளினிக் அவ்வளவுதான்... முடித்து வைத்தார் மா.சுப்ரமணியன்!