காசா கிராண்ட் கட்டுமான நிறுவன ரகசிய ஆவணங்கள் திருட்டு: போலீஸில் பரபரப்பு புகார்!

காசா கிராண்ட் நிறுவனம்
காசா கிராண்ட் நிறுவனம்

காசா கிராண்ட் நிறுவனத்தில் விளம்பர ஆவணங்கள் மற்றும் ரகசிய தகவல்களைத் திருடி வேறோரு நிறுவனத்திற்கு விற்றதாக நிறுவன ஊழியர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வருமான வரித்துறை சோதனை
வருமான வரித்துறை சோதனை

சென்னை திருவான்மியூர் எல்பி சாலையில் செயல்பட்டு வரும் பிரபல கட்டுமான நிறுவனமான காசா கிராண்ட் நிறுவனத்தில் நேற்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இரண்டாவது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வரும் நிலையில் இந்நிறுவனத்தில் சட்ட உதவி மேலாளராக பணியாற்றி வரும் மணிகண்டன் என்பவர் திருவான்மியூர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், தங்களது காசா கிராண்ட் கட்டுமான நிறுவனத்தில் விளம்பர பிரிவில் பணிபுரியும் சதீஷ் என்பவர் கடந்த சில மாதங்களாக காசா கிராண்ட் Aspire என்ற project - ன் அனைத்து விளம்பர ஆவணங்கள் மற்றும் நிறுவனத்தின் ரகசிய தகவல்களை DAC DEVELOPMENT என்ற நிறுவனத்திற்கு விற்றுவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

இதனால் தங்கள் நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்பட்டதுள்ளதாகவும் என நிறுவனத்தின் விளம்பரம் மற்றும் ரகசிய தகவல்களைத் திருடி வேறோரு நிறுவனத்திற்கு விற்ற ஊழியர் சதீஷ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இப்புகாரின் அடிப்படையில் திருவான்மியூர் குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கெனவே காசா கிராண்ட் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது தங்கள் நிறுவனத்தின ரகசிய ஆவணங்களை வேறோரு நிறுவனத்திற்கு விற்றதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

மிஸ் பண்ணாதீங்க... இன்றும், நாளையும் வாக்காளர் பெயர் சேர்க்க, திருத்த தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்!

நாளை இரவு வரை 66 ரயில்கள் ரத்து... பயணத்தை திட்டமிட்டுக்கோங்க!

அதிர்ச்சி... கழுத்தில் காயங்களுடன் பிரபல நடிகை உயிரிழப்பு! மர்ம மரணமாக வழக்குப்பதிவு!

அதிகளவு பூச்சிக்கொல்லி மருந்துடன் ஏலக்காய்... சபரிமலையில் 6,65,000 அரவணை பாயாச டின்களை அழிப்பு!

திருச்சியில் அடுத்தடுத்து 6 வாகனங்கள் மோதி பயங்கர விபத்து!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in