முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது முறைகேடு புகார்

நில அபகரிப்பு வழக்கில் மகள், மருமகன் மீது அடுத்த நடவடிக்கை
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது முறைகேடு புகார்

குடிசைமாற்று வாரிய குடியிருப்புகள் வழங்கியதில் முறைகேடு செய்ததாக முன்னாள் அமைச்சர் ஜெய்குமார் மீது மேலும் ஒரு புகார் வந்துள்ளதாகவும், நில அபகரிப்பு வழக்கில் ஜெயக்குமாரின் மகள் மற்றும் மருமகன் மீது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் சென்னை காவல்துறை ஆணையர் தெரிவித்தார்.

கோடைகாலத்தில் போக்குவரத்து பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு மோர் வழங்கும் நிகழ்ச்சி வேப்பேரி ஈவேரா சம்பத் சாலை சிக்னலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், போக்குவரத்து கூடுதல் ஆணையர் கபில்குமார்சரத்கர், தெற்கு மண்டல போக்குவரத்து இணை ஆணையர் ராஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு போக்குவரத்து காவலர்களுக்கு மோர் வழங்கினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த காவல் ஆணையர் சங்கர் ஜிவால், "இன்று முதல் அடுத்த 4 மாதங்களுக்கு இரண்டு வேளை போக்குவரத்து காவலர்களுக்கு மோர் வழங்கப்படும் என்றும், வருடத்திற்கு 30 லட்சம் ரூபாய் இதற்காக அரசு நிதி ஒதுக்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கோடைகாலத்தில் போக்குவரத்து காவலர்கள் உடல் ரீதியான பிரச்சினை ஏற்படாமல் தடுக்க மருத்துவ முகாம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்த அவர், சாலை விதிகள் மற்றும் போக்குவரத்து தொடர்பான சாலை மாற்ற திட்டங்களை அந்தந்த காவல் மாவட்டத்தின் போக்குவரத்து உதவி ஆணையர் மற்றும் ஆய்வாளர் வகுத்து கொள்ளும் நடைமுறையை கொண்டு வரவுள்ளதாக கூறினார்.

மேலும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது குடிசைமாற்று வாரிய குடியிருப்பு ஒதுக்கீடு செய்ததில் மோசடி செய்ததாக திருவொற்றியூர் காவல் நிலையத்திற்கு புகார் வந்துள்ளதாகவும், அந்த புகார் மீதான விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறிய அவர், நில அபகரிப்பு வழக்கில் ஜெயக்குமாரின் மகள் மற்றும் மருமகன் மீது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்களை கண்டறிய 367 சந்திப்பில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கடும் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்த அவர்,

பள்ளி மாணவர்கள் வாகனங்கள் ஓட்டி செல்வதை பெற்றோர்கள் ஊக்குவிக்க கூடாது எனவும் பள்ளி மாணவர்கள் வாகனம் ஓட்டி சென்றால் அவர்களின் பள்ளியை கண்டறிந்து ஆசிரியர்கள் மூலம் சம்மந்தப்பட்ட மாணவரை அடையாளம் கண்டு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும் எனவும் கூறினார்.

கரோனா காலத்தின் போது பிரீத் ஆனலைசர் கருவி பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதாகவும், தற்போது பிரீத் ஆனலைசர் கருவி மூலமாக குடிபோதையில் வாகனம் ஓட்டுவோர் மீது 150 வழக்குகள் வரை போடுவதாகவும், லோன் ஆப் மோசடியை தடுக்க பல நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதுடன் இணை ஆணையர் தலைமையில் 4 சைபர் காவல் நிலையங்கள் அமைக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in