`இவரது செயலால் நடிகைகள் பயப்படுகிறார்கள்'- பயில்வான் ரங்கநாதனுக்கு எதிராக காவல் துறையில் புகார்

`இவரது செயலால் நடிகைகள் பயப்படுகிறார்கள்'- பயில்வான் ரங்கநாதனுக்கு எதிராக காவல் துறையில் புகார்

பெண்கள், நடிகர், நடிகைகள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசி வீடியோ வெளியிட்டு வரும் நடிகர் பயில்வான் ரங்கதாதன் மீது நடவடிக்கை கோரி தயாரிப்பாளர் கே.ராஜன் தலைமையிலான தமிழர் மக்கள் இயக்கம் சார்பில் சென்னை காவல் துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழர் மக்கள் இயக்கம் சார்பில் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குநர் திருமலை, உள்ளிட்டோர் நடிகர் பயில்வான் ரங்கநாதன் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தனர். அதில், கடந்த சில மாதங்களாக திரைப்பட நடிகர் பயில்வான் ரங்கநாதன் யூடியூப் சேனலில் பெண்கள் குறித்தும், நடிகர், நடிகைகள் குறித்தும் ரகசியங்களை வெளியிடுவதாக கூறி அவர்களை பற்றி அவதூறு பரப்பும் நோக்கில் அருவருக்கத்தக்க வகையில் பொய்யான செய்திகளை வெளியிட்டு வருவதாகவும், எனவே காவல்துறை அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறிருந்தனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.ராஜன், முதல்வர் முக.ஸ்டாலின் நல்லாட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பும், பெருமையும் சேர்ந்து வரும் இந்த நேரத்தில் திரைப்பட நடிகர் பயில்வான் ரங்கநாதன் நடிகர், நடிகைகள் மற்றும் பெண்கள், பற்றிய ரகசியங்களை வெளியிடுவதாக கூறி அவர்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசிய வீடியோவை பதிவிட்டு வருகிறார். அவர்கள் குறித்து பொய்யான செய்தியை பரப்பி அதன்மூலம் மிரட்டி பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் பயில்வான் ரங்கநாதன் செயல்பட்டு வருகிறார்.

மேலும் நடிகை கீர்த்திசுரேஷ், சினேகா, சுகன்யா, ராதிகா குறித்து அவர் கூறியது அனைத்தும் பொய் என்றும், நடிகை கீர்த்தி சுரேஷுகு இன்னும் திருமணமாகவில்லை. அவருக்கென்று ஒரு எதிர்கால வாழ்க்கை உள்ளது. அதேபோல் சுகன்யா, சினேகா உள்ளிட்டோர் திருமணமாகி கணவன் ,குழந்தைகளுடன் அமைதியாக வாழ்ந்து வரும் சூழலில் பயில்வான் ரங்கநாதனின் பேச்சு அவர்களது வாழ்க்கையில் பெரும் பாதிப்பு ஏற்படும் சூழலை உண்டாக்ககூடும். அதுமட்டுமன்றி முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி குறித்தும் பயில்வான் ரங்கநாதன் பேசியுள்ளார். மேலும் நடிகர், நடிகைகளை அவர் அவருடன் சென்றார், இவருடன் சென்றார் என இணைத்து பொய்யான செய்தியை சொல்லி பின்னர் அதை வைத்து சம்மந்தப்பட்டவர்களை மிரட்டி பணம் பறிப்பதையே தொழிலாக ரங்கநாதன் கொண்டுள்ளார்.

ஏற்கெனவே பல பெண்கள் ரங்கநாதன் மீது புகார்கள் அளித்துள்ளனர். ஆனால் நடிகர், நடிகைகள் அவர் மீது புகார் அளிக்க பயப்படுகின்றனர். சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த ரங்கநாதன், என்னை யாரும் எதுவும் செய்யமுடியாது, என்னை யாராவது தாக்க வந்தால் அரிவாளால் அவர்கள் கழுத்தை அறுத்துவிடுவேன். நான் தூத்துக்குடிகாரன் என கூறியுள்ளார். இதுபோல் மிரட்டல் விடுக்கும் வகையில் ரங்கநாதன் பேசி வருவதால் அவர் மீது நடிகர், நடிகைகள் புகார் அளிக்க பயப்படுவதுடன் கொலை செய்து விடுவாரோ என்ற அச்சத்தில் எதுவும் பேசாமல் உள்ளனர். எனவே காவல்துறை, பயில்வான் ரங்கநாதன் மீது உரிய நடவடிக்கை எடுத்து அவரை கைது செய்ய வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.

இயக்குநர் திருமலை கூறுகையில், "சினிமாவுக்கு மக்கள் மத்தியில் பெரும் மதிப்பு உண்டு, சினிமாவில் சாப்பிட்டு, சினிமாவில் வாழ்ந்த பயில்வான் ரங்கநாதன் இன்று உயிர் வாழ்கின்றார் என்றால் அது சினிமா போட்ட பிச்சை. இந்த சினிமாவில் எவ்வளவோ ஜாம்பவான்கள் கொடுத்த உதவியில் என்னை போன்று மற்றவர்கள் வாழ்ந்து வருகின்றனர். என்னை போன்று பலரும் சினிமாவை கடவுளாக பார்க்கிறோம். எனவே சினிமாவை கேவலப்படுத்தும் வகையில் பேசிவரும் ரங்கநாதன் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in