`இளையராஜாவை சாதி ரீ தியாக பேசிய ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது வழக்கு பதியணும்'

சென்னை காவல் துறை அலுவலகத்தில் பறையர் பேரவை புகார்
`இளையராஜாவை சாதி ரீ தியாக பேசிய ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது வழக்கு பதியணும்'

"இளையராஜா குறித்து பேசிய ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது தாழ்த்தப்பட்டோர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும். இல்லையெனில் அவரது வீட்டின் முன்பு சிறுநீர் கழிப்பு போராட்டம் நடத்தப்படும்" என பறையர் பேரவை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னான் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பறையர் பேரவை அமைப்பின் நிறுவனர் ஏர்போர்ட் மூர்த்தி புகார் ஒன்றை அளித்துள்ளார்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஏர்போர்ட் மூர்த்தி, அம்பேத்கர்- மோடி என்ற பெயரில் வெளியாகி உள்ள புத்தகத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதி இருப்பதாகவும், மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு விட்டதாக இளையராஜா மீது பலர் வன்மமான கருத்துக்களை தெரிவித்து வருவதாக அவர் கூறினார்.

குறிப்பாக அந்த புத்தகத்தில் அம்பேத்கரின் திட்டங்களை மோடி நடைமுறைப்படுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளதாகவும், புத்தகத்தை படிக்காமல் சிலர் அம்பேத்கருடன் மோடியை ஒப்பிட்டு பேசியிருப்பதாக நினைத்து இளையராஜாவை இழிவாக பேசி வருவது கண்டனத்துக்குரியது என தெரிவித்தார்.

சமீபத்தில் இது குறித்து ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதாகவும், அதில் தபேலா எடுத்து அடிக்கிறவன் எல்லாம் இசையமைப்பாளர் ஆகிவிட முடியாது எனவும் சாதி ரீதியாக இளையராஜா குறித்து கருத்து தெரிவித்துள்ளதாக அவர் கூறினார்.

பாஜக மற்றும் மோடியின் மீதுள்ள வெறுப்பை இளையராஜா மீது சிலர் காட்டி வருவதாக குற்றம்சாட்டிய மூர்த்தி, எனவே சாதி ரீதியாக இளையராஜா குறித்து பேசிய இளங்கோவன் மீது தாழ்த்தப்பட்டோர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் இல்லையென்றால் அவரை அசிங்கப்படுத்தும் விதமாக அவரது வீட்டின் முன்பு சிறுநீர் கழிக்கும் போராட்டம் நடத்தப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

Related Stories

No stories found.