ஆபாச வார்த்தையால் அர்ச்சனை... நீதிபதியை மிரட்டிய நகைச்சுவை நடிகர் கைது!

நடிகர் ஜெயமணி
நடிகர் ஜெயமணி

நீதிமன்ற மாஜிஸ்திரேட்டுக்கு கொலை மிரட்டல் விடுத்த நகைச்சுவை நடிகர் உள்பட 2 இருவர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

சென்னை வேளச்சேரி பகுதியை சேர்ந்த திருமால் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் 7-வது நீதிமன்ற மாஜிஸ்திரேட்டாக பணியாற்றி வருகின்றார். கடந்த 18-ம்தேதி மாஜிஸ்திரேட் திருமால் சென்னை வேளச்சேரி பீனிக்ஸ் மால் அருகில் உள்ள மாநகராட்சி பூங்காவில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த திரைப்பட நகைச்சுவை நடிகர் ஜெயமணி மற்றும் அவரது நண்பர் மாரிமுத்து இருவரும் சேர்ந்து நீதிபதி திருமாலை ஆபாசவார்த்தைகளில் திட்டி தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக திருமால் கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளான 341- சிறை வைத்தல், 294(b)- ஆபாசமாக திட்டுதல், 506(1)- கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நேற்று நடிகர் ஜெயமணி, மாரிமுத்து ஆகிய இருவரை போலீஸார் கைது செய்தனர். பின்னர் இருவரிடம் விசாரணை நடத்தி போலீஸார் பிறகு காவல் நிலைய ஜாமீனில் இருவரையும் விடுவித்தனர். நகைச்சுவை நடிகர் நீதிபதிக்கு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in