அதிர்ச்சி... விடிய விடிய மது பார்ட்டி... கல்லூரி மாணவி சுட்டுக் கொலை!

நிஷ்தா திரிபாதி
நிஷ்தா திரிபாதி
Updated on
2 min read

லக்னோவில் விடிய விடிய நடைபெற்ற மது பார்ட்டியில் இன்று அதிகாலை கல்லூரி மாணவி சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாபு பனாரசி தாஸ் கல்லூரி
பாபு பனாரசி தாஸ் கல்லூரி

உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் பாபு பனாரசி தாஸ்(பிபிடி) கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் நிஷ்தா திரிபாதி(23) என்ற மாணவி பி.காம் ஹானர்ஸ் படித்து வந்தார்.

இந்த நிலையில் அவரது நண்பர் ஆதித்யா பதக் என்பவர் அழைப்பின் பேரில் லக்னோவின் சின்ஹாட் பகுதியில் உள்ள தயாள் ரெசிடென்சிக்கு நள்ளிரவு பார்ட்டிக்கு நிஷ்தா நேற்று சென்றுள்ளார். இந்த பார்ட்டியில் ஆதித்யாவின் நண்பர்கள் பலர் கலந்து கொண்டனர். இதில் மதுவும் பரிமாறப்பட்டுள்ளது.

துப்பாக்கிச்சூடு
துப்பாக்கிச்சூடு

விடிய, விடிய பார்ட்டி நடந்த நிலையில், இன்று அதிகாலை 3.30 மணியளவில் தயாள் ரெசிடென்சியில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. அறையில் இருந்த நிஷ்தா திரிபாதி துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் லோஹியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி நிஷ்தா பரிதாபமாக உயிரிழந்தார்.

கைது
கைது

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஆதித்யா பதக் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 302 பிரிவின் கீழ் வழ்க்குப் பதிவு செய்யப்பட்டுள்ளனர். பார்ட்டியில் கலந்து கொண்டவர்களிடம் நிஷ்தா ஏன் சுட்டுக் கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து சின்ஹாட் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இக்கொலை குறித்து லக்னோ கிழக்கு ஏடிசிபி சையது அலி கூறுகையில்," நிஷ்தா சுட்டுக் கொலை செய்யப்பட்டது குறித்து அவரது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியான ஆதித்யா பதக் கைது செய்யப்பட்டுள்ளனர். எதற்காக அவர் நிஷ்தாவை சுட்டார் என்பது குறித்து அறையில் இருந்தவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது" என்றார்.

இரவு நேர பார்ட்டியில் கல்லூரி மாணவி சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in