
கடலூரில் கல்லூரி மாணவ, மாணவிகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் தேவனாம்பட்டினத்தில் உள்ள அரசு தந்தை பெரியார் கலைக்கல்லூரி முடிந்து இன்று மாலை மாணவ, மாணவிகளை ஏற்றிக் கொண்டு ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. கடலூர் கடற்கரை சாலையில் ஆட்டோ சென்ற போது திடீரென நாய் ஒன்று குறுக்கே வந்தது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையில் கவிழ்ந்தது.
இதில் ஆட்டோவில் பயணம் செய்த 11 மாணவ, மாணவிகள் படுகாயம் அடைந்தனர். மேலும் மூன்றாம் ஆண்டு படிக்கும் தமிழ்ச்செல்வன் (21) என்ற மாணவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மற்ற மாணவ, மாணவிகள் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையும் வாசிக்கலாமே...
பரபரப்பு... முதல்வர் வீட்டின் மீது கல்வீச்சு!
வைரல் வீடியோ: நடுரோட்டில் டூவீலரில் காதலர்கள் சில்மிஷம்!
ஒரு நாள் பிரிட்டன் தூதரான சென்னை இளம்பெண்! குவியும் வாழ்த்துகள்!
உஷார்... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
அடி தூள்... பொன்னியின் செல்வனாக கலக்கும் அஜித்! ரசிகர்கள் கொண்டாட்டம்!