கோலாரில் கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை: காவல் துறை அதிகாரி மகனுக்குத் தொடர்பு?

கார்த்திக் சிங்
கார்த்திக் சிங்

கோலாரில் கல்லூரி மாணவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் காவல் துறை அதிகாரியின் மகன் உள்பட 6 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

கொலை
கொலை

கர்நாடகா மாநிலம், கோலார் மாவட்டம், பெச்சமனஹள்ளி லே அவுட்டைச் சேர்ந்தவர் கார்த்திக் சிங்(17). இவர் பியூசி முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு கார்த்திக் சிங் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளி வளாகத்தில் நிர்வாண நிலையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கோலார் போலீஸார், கல்லூரி மாணவர் கார்த்திக் சிங் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் கார்த்திக் சிங்கை சிலர் தாக்கிய வீடியோ வெளியானது. இதுகுறித்து விசாரித்த போது முன்விரோதம் காரணமாக இக்கொலை நடைபெற்றதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. 6 பேர் கொண்ட கும்பல் கார்த்திக் சிங்கை கொலை செய்ததும் தெரிய வந்தது.

காவல் துறை அதிகாரி ஒருவரின் மகனான ஷைன் என்கிற திலீப், கார்த்திங் சிங்கை நேற்று இரவு அழைத்துள்ளார். அப்போது கூரிய ஆயுதங்களால் கார்த்திக் சிங் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலையில் திலீப்பிற்கு தொடர்பு உள்ளதாக போலீஸார் சந்தேகப்படுகின்றனர். இதுகுறித்து கோலார் டவுன் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மர்மநபர்களைத் தேடி வருகின்றனர்.

கர்நாடக உள்துறை அமைச்சர் டாக்டர் ஜி பரமேஸ்வராவின் நெருங்கிய உதவியாளர் எம்.ஸ்ரீனிவாஸ் கோலார் மாவட்டம் ஸ்ரீனிவாஸ்பூர் புறநகரில் அக்.23 அன்று வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 6 பேரை கோலார் போலீஸார் கைது செய்தனர். இந்த நிலையில், கல்லூரி மாணவர் கோலாரில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in