விவசாய கிணற்றில் மிதந்த கல்லூரி மாணவியின் உடல்... கொலையா?

ஆசிகா
ஆசிகா

நாமக்கல் மாவட்டம், மெட்டலா  அருகே கல்லூரி மாணவி கிணற்றில்  குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் ஏற்படுத்தியுள்ளது. 

சேலம் மாவட்டம், தலைவாசல் பகுதியை சேர்ந்தவர் மனோகரன்  மகள் ஆசிகா (18). இவர் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பயோ கெமிஸ்ட்ரி முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம்  நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள மெட்டாலாவில் உள்ள தங்கள் குலதெய்வமான ஆனந்தாயி அம்மன் கோயிலுக்கு ஆசிகா மட்டும் தனியாக  சென்றுள்ளார். அன்று அவர் வீடு திரும்பவில்லையாம்.  அதனால் அவர் தந்தை உள்ளிட்ட குடும்பத்தினர் அவரைத் தேடி வந்தனர்.

இதையடுத்து கோயில் வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை போலீஸார் ஆய்வு செய்தபோது, அதில்  ஆசிகா வந்துவழிபட்ட காட்சிகள்  பதிவாகியிருந்தது. இதையடுத்து அந்தப் பகுதியில் போலீஸார் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அப்பகுதியில் உள்ள  செங்கோட்டுவேல் (44)  என்ற விவசாயியின்  தோட்டத்தில் இருந்த விவசாய கிணற்றில் ஆசிகாவின்   உடல் தண்ணீரில் மிதப்பதைக் கண்டறிந்தனர்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் ராசிபுரம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றில் இறங்கி  பெண்ணின் உடலை மீட்டனர். இதுபற்றி ஆயில்பட்டி போலீஸார்  வழக்குப்பதிவு செய்து இளம் பெண்ணின் உடலை  பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து  விசாரணை நடத்தினர்.  ஆசிகா கொலை செய்யப்பட்டுள்ளாரா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணை செய்தனர். ஆனால் கோயிலில் வந்து சாமி கும்பிட்ட பிறகு அங்குள்ள கிணற்றை நோக்கி ஆசிகா செல்வதும், அவராகவே கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு ஆசிகாவுக்கு என்ன பிரச்சினை என்பது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதையும் வாசிக்கலாமே... சேலையில் ஜொலிக்கும் கீர்த்தி சுரேஷ்!

தெறிக்க விட்ட மதுரைக்காரைங்க... டாஸ்மாக்கில் தீபாவளி வசூல் ரூ.467 கோடி!

ஆந்திராவை அலற வைக்கும் ஜட்டி கேங்...போலீஸார் எச்சரிக்கை!

பகீர் வீடியோ... மதுவை புகட்டி இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்!

அம்மா மினி கிளினிக் அவ்வளவுதான்... முடித்து வைத்தார் மா.சுப்ரமணியன்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in