பள்ளி வளாகத்தில் தூக்கில் தொங்கிய கல்லூரி மாணவன்: அலைபேசியை வைத்து போலீஸ் விசாரணை

ஜீவானந்தம்
ஜீவானந்தம்

காட்டுமன்னார்கோயிலில் கல்லூரி மாணவர் ஒருவர், வீட்டுக்கு அருகேயுள்ள பள்ளி வளாகத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் மேல வீதியில் வசிப்பவர் கொத்தனார் ரமேஷ். இவரது மகன் ஜீவானந்தம் (20). அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தார் நேற்று இரவு முழுவதும் அவர் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் தேடியுள்ளனர்.

இந்நிலையில் காட்டுமன்னார்கோயில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள அரசு மாணவர் விடுதியில் பின்புறம் உள்ள திறந்தவெளி அறையில் ஜீவானந்தம் தூக்கிட்ட நிலையில் சடலமாக இன்று காலை மீட்கப்பட்டார்.

அந்த இடத்தில் இருந்த ஜீவானந்தத்தின் அலைபேசியை கைப்பற்றிய காட்டுமன்னார்கோயில் போலீஸார், அதிலுள்ள தகவல்கள் அடிப்படையிலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது உடல் காட்டுமன்னார்கோயில் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.

எப்போதும் பள்ளி மைதானத்தில் இருக்கும் ஜீவானந்தம் உடற்பயிற்சி, நடைபயிற்சி என ஈடுபடுவார். இந்த நிலையில் அதே பள்ளி வளாகத்தில் அவர் தூக்கில் தொங்கியதன் மர்மம் குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in