அதிர்ச்சி... நிர்வாணமாக மீட்கப்பட்ட கல்லூரி மாணவி... மர்மநபர்களுக்கு வலைவீச்சு!

கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை
கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை

கோழிக்கோட்டில் ஆளில்லாத வீட்டில் நிர்வாண நிலையில் கட்டி வைக்கப்பட்ட கல்லூரி மாணவி போலீஸரால் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி கடந்த புதனன்று காணாமல் போனார். இது குறித்து கல்லூரி மாணவியைக் கண்டுபிடித்து தருமாறு அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இதையடுத்து காணாமல் போன மாணவியின் செல்போனை வைத்து சைபர் கிரைம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். இந்நிலையில் கோழிக்கோடு மாவட்டம், தொட்டிப்பாலம் பகுதியில் மாணவி இருப்பதாக போலீஸாருக்கு செல்போன் டவர் மூலம் தெரிய வந்தது.

இதையடுத்து ஆளில்லாத வீடு ஒன்றில், நிர்வாண நிலையில் அந்த மாணவி கட்டி வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அந்த மாணவியை மீட்டு கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், மாணவி மீட்கப்பட்ட வீட்டில் எம்.டி.எம்.ஏ என்ற போதைப்பொருள் மாதிரி இருந்ததைச் சேகரித்த போலீஸார், அப்பகுதியைச் சேர்ந்த போதைக்கு அடிமையான ஒருவரை தேடும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கல்லூரி மாணவி, தற்போது நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். காணாமல் போன கல்லூரி மாணவி கட்டி வைக்கப்பட்ட நிலையில் நிர்வாணமாக மீட்கப்பட்ட சம்பவம் கோழிக்கோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in