நீட் பயிற்சி மையத்திலேயே உயிரை மாய்த்த கோவை மாணவி

நீட் பயிற்சி மையத்திலேயே உயிரை மாய்த்த கோவை மாணவி

கோவையில் தனியார் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை, வடவள்ளியை சேர்ந்தவர் மாணவி ஸ்வேதா. இவர், கோவில்பாளையத்தில் உள்ள தனியார் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் படித்து வந்தார். கடந்த 5 மாதங்களாக அங்கு தங்கியிருந்து நீட் தேர்வுக்கு மாணவி ஆயத்தமாகி வந்தார். இந்நிலையில், தனியார் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் மாணவி ஸ்வேதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தனியார் நீட் தேர்வு பயிற்சி மைய நிர்வாகிகள் கொடுத்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

இதையடுத்து, மாணவி தங்கியிருந்த அறையில் காவல்துறையினர் தீவிர சோதனை நடத்திய போது காதல் கடிதங்கள் சிக்கியன. இதையடுத்து, மாணவி காதல் விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நீட் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.