பரபரப்பு... கோவையில் கொடியேற்ற முயற்சி... பாஜகவினர் கைது!

கோவையில் கைது செய்யப்பட்ட பாஜகவினர்.
கோவையில் கைது செய்யப்பட்ட பாஜகவினர்.

கோவையில் கொடிக்கம்பம் அமைத்திருந்த பகுதியில் அனுமதியின்றி கூடியதாக பாஜகவினர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மசக்காளிபாளையம் ஜங்ஷன் பகுதியில் பாஜக சார்பில் கொடிக்கம்பம் ஒன்று ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இன்று காலை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி தலைமையில் கூடிய பாஜகவினர், கொடியேற்றுவதாக கூறி புதிய கொடிக்கம்பத்தை நட முயற்சித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த போலீஸார், புதிய கொடிக்கம்பம் அமைக்கக் கூடாது என அறிவுறுத்தினர்.

பாஜகவினர் கைது
பாஜகவினர் கைது

இதனால் பாஜகவினருக்கும், போலீஸாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அனுமதியின்றி கூட்டம் கூடியதாக கூறி, மாவட்ட தலைவர் பாலாஜி, மாநில துணைத்தலைவர் கனகசபாபதி உட்பட 45 பாஜகவினரை போலீஸார் கைது செய்து தனியார் மண்டபத்திற்கு அழைத்து சென்றனர்.

கோவையில் திரண்ட பாஜகவினர்.
கோவையில் திரண்ட பாஜகவினர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in