கோவை பெட்ரோல் குண்டுவீச்சில் 2 பேர் கைது: எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் தெரியுமா?

கோவை பெட்ரோல் குண்டுவீச்சில் 2 பேர் கைது: எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் தெரியுமா?

கோவையில் இந்து அமைப்பின் நிர்வாகிகள் இல்லங்கள், வாகனங்களின் மீது பெட்ரோல் குண்டுவீசிய இருவர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் எஸ்.டி.பி.ஐ கட்சியில் பொறுப்பாளர்களாக உள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களுக்குப் பேட்டி கொடுத்தார். அப்போது அவர் கூறியதாவது, “கோவை மாநகரில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டு புலன்விசாரணை நடந்துவந்தது. இந்நிலையில் 23 ம் தேதி, பிற்பகல் குனியமுத்தூர் பகுதியில் இந்து முன்னணியை சேர்ந்த ரகு என்பவர் வீட்டு முன்பு நிறுத்தியிருந்த கார் தீவைக்கப்பட்டது. அன்று இரவு, அதேபகுதியை சேர்ந்த பரத் என்னும் பாஜக நிர்வாகி வீட்டில் பாட்டிலில் மண்ணெண்ணெய் ஊற்றி, பெட்ரோல் குண்டு தூக்கி வீசப்பட்டது. இவ்விரு சம்பவங்கள் குறித்தும் தனித்தனியே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.இவ்விரு வழக்கிலும் தலா 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. சிசிடிவி காட்சிகள் மற்றும் போலீஸாரின் புலனாய்வு விசாரணையும் நடத்தப்பட்டது.

இதில் இன்றுமாலை அறிவொளிநகர் பகுதியைச் சேர்ந்த ஜேசுராஜ்(34), இலியாஸ்(34) ஆகியோரை கைது செய்துள்ளோம். இவர்கள் இருவருக்கும் இந்த இரு சம்பவங்களோடும் தொடர்பு உண்டு. இலியாஸ் குற்றம் நிகழ்ந்த அதேபகுதியைச் சேர்ந்தவர். குனியமுத்தூரில் திருவள்ளுவர் நகரில் இலியாஸின் வீடு உள்ளது. இவர்கள் இருவரும் அந்தப் பகுதியில் எஸ்.டி.பி.ஐ கட்சியில் பொறுப்பாளராக உள்ளனர். கோவை மாநகரில் இதேபோல் ஆறு வழக்குகளும், பேருந்து கண்ணாடியை உடைத்த ஒரு வழக்கும் உள்ளது. அந்த வழக்குகளிலும் குற்றவாளிகளை நெருங்கிவிட்டோம்.” என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in