ஒருவரின் உயிரைப் பறித்தது டாஸ்மாக் மதுபானம்; ஒருவரின் கண் பறிபோனது- கோவையில் விபரீதம்

ஒருவரின் உயிரைப் பறித்தது டாஸ்மாக் மதுபானம்; ஒருவரின் கண் பறிபோனது- கோவையில் விபரீதம்

கோவையில் டாஸ்மாக் கடையில் மதுபானம் வாங்கி குடித்த திமுக பிரமுகர் உயிரிழந்துள்ளார். ஒருவர் கண் குறைபாடுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குடிமன்னர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை, தெலுங்குபாளையத்தை சேர்ந்தவர் சண்முகம். திமுக பிரமுகரான இவர், தனது நண்பர் சிவா என்பவருடன் பேரூர் சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் கடைக்கு மதியம் 12 மணிக்கு சென்றுள்ளார். கடை திறப்பதற்கு முன்பே அவர் மதுபானம் வாங்கியுள்ளார். பின்னர் இருவரும் சேர்ந்து மதுகுடித்துள்ளனர்.

சிறிது நேரத்தில் இருவரும் மயங்கி விழுந்துள்ளனர். உடனடியாக இருவரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், சண்முகம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிவாவுக்கு கண்ணில் பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் இறப்புக்கான காரணம் தெரியவரும் என கூறியுள்ளனர்.

Related Stories

No stories found.