காதலனுடன் தகராறு... கோபத்தில் மின் கோபுரத்தில் ஏறிய காதலி... 150 அடி உயரத்தில் நடந்த சண்டை!

காதலனுடன் தகராறு... கோபத்தில் மின் கோபுரத்தில் ஏறிய காதலி... 150 அடி உயரத்தில் நடந்த சண்டை!

காதல் விவகாரத்தில் இளம் காதல் ஜோடி ஒன்று 150 உயர மின்கோபுரத்தில் ஏறி சண்டையிட்டு கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் மகேந்திரா பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணும், அதே பகுதியைச் சேர்ந்த இளைஞரும் நீண்ட காலமாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் காதலி தனது காதலன் வீட்டுக்கு சென்று வாழ்ந்து வந்துள்ளார். சில நாட்களில் அவர்களுக்குள் காதல் வாழ்க்கை கசந்து இருக்கிறது. தனது காதலனின் நடவடிக்கையால் அதிர்ச்சி அடைந்த காதலி கோபத்தின் உச்சத்திற்கு சென்று விட்டார். இதையடுத்து அருகில் இருந்த 150 உயர மின் கோபுரத்தில் ஏறியுள்ளார் காதலி. இதனால் அதிர்ச்சி அடைந்த காதலன் மின்கோபுரத்தில் காதலியின் பின்னாலேயே ஏறி இருக்கிறார். அப்போது தனது காதலி எந்த விபரீத முடிவும் எடுத்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் அவரிடம் பேசிக் கொண்டே சென்றுள்ளார்.

இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது, காதல் ஜோடிகள் இருவரும் 150 உயரத்தில் இருந்தபடி சண்டை போட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உங்களுக்கு சண்டை போடுவதற்கு வேறு இடம் கிடைக்கவில்லையா என்று காவல்துறையினர் திட்டி தீர்த்தனர். பின்னர் இருவரையும் கீழே இறங்கும்படி காவல்துறையினர் கேட்டுக் கொண்டனர். ஆனால் அரை மணி நேரமாக காதல் ஜோடிகள் மின் கோபுரத்திலிருந்து கீழே இறங்கவில்லை. பின்னர் காவல் துறையினரின் அறிவுறுத்தலை ஏற்றுக் கொண்ட காதலர்கள் கீழே இறங்கினர். இறங்கியவுடன் காதலன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். காதலியிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in