பட்டியல் இனத்தவரை மதம் மாற்ற முயற்சி... கிறிஸ்துவ பாதிரியார் உட்பட 10 பேர் கைது

மத மாற்ற ஏற்பாடு
மத மாற்ற ஏற்பாடு

பட்டியலின மக்களை மதம் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டதாக, கிறிஸ்துவ பாதிரியார் உட்பட பத்து பேரை உத்தர பிரதேச மாநில போலீஸார் கைது செய்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில், நூற்றுக்கணக்கான இந்துக்களை கிறிஸ்துவ மதத்துக்கு மாற்ற முயன்றதாக, தேவாலயத்தின் பாதிரியார் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த மாநிலத்தில் அமலில் உள்ள மதமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் போலீஸார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

மதமாற்றம்
மதமாற்றம்

பாரபங்கியின் தேவா பகுதியில் உள்ள செயின்ட் மேத்யூஸ் மெதடிஸ்ட் தேவாலயத்தில், நேற்று மாலை நடைபெற்ற மதமாற்ற முயற்சியை தடுத்ததோடு, குற்றம் சாட்டப்பட்ட 10 நபர்களை சம்பவ இடத்தில் போலீஸார் கைது செய்தனர். தேவாலயத்தின் பிரார்த்தனை மண்டபத்தில் சோதனை நடத்தியதில், பாதிரியாரின் அழைப்பின் பேரில் கூடியிருந்த 200க்கும் மேற்பட்ட பட்டியல் இனத்தவர் அடையாளம் காணப்பட்டனர்.

“மத நடவடிக்கையின் மூலம் தங்கள் நோய்க்கு சிகிச்சை அளிக்கப்படும் என்ற உறுதிமொழியின் அடிப்படையில், அயோத்தியில் இருந்து இந்த மக்கள் இங்கு அழைத்து வரப்பட்டனர். பாதிரியார் மற்றும் அவரைச் சார்ந்த சிலர் சிறப்பு வழிபாட்டு நடவடிக்கைகளின் மூலமாக பட்டியலினத்தவரை மதம் மாற்றும் நடவடிக்கையில் ஈடுபடுத்தினர்” என்று காவல்துறை தெரிவிக்கிறது.

படிப்பறிவற்ற பட்டியலின மக்களை, நோய் குணமாக்கல், உடல் ஆரோக்கியத்துக்கான வழிபாடு மற்றும் வேலை வாங்கித் தருவது உள்ளிட்ட உறுதிமொழிகளின் அடிப்படையில் அழைத்து வரப்பட்டு, மதம் மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் போலீஸார் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக தேவாலயத்தின் பாதிரியார் டொமினிக் உட்பட 10 பேர் கைது செய்யபட்டனர். அப்பகுதியை சேர்ந்த விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாதிரியார்
பாதிரியார்

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது ‘உத்தரப் பிரதேச சட்ட விரோதமான மதமாற்றத் தடைச் சட்டம், 2021-ன் பிரிவுகள் 3 மற்றும் 5(1)’ என்பதன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின்படி, எந்தவொரு நபரும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, எவர் ஒருவரையும் ஒரு மதத்திலிருந்து மற்றொரு மதத்திற்கு, தவறான சித்தரிப்பு, தேவையற்ற செல்வாக்கு, வசீகரம் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி மதம் மாற்றுவது தடை செய்யப்படுகிறது.

இதையும் வாசிக்கலாமே...

வாக்காளர் பட்டியலில் இருந்து 1.66 கோடி பேர் நீக்கம்... உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்!

சட்லஜ் ஆற்றில் மீட்கப்பட்டது வெற்றி துரைசாமியின் உடல் பாகமா?: டிஎன்ஏ பரிசோதனை!

பாஜகவில் ஐக்கியமாகும் 18 அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள்... அண்ணாமலை அவசரமாக இன்று டெல்லி பயணம்!

கூட்டணிக்காக விடாமல் துரத்தும் அதிமுக, பாஜக... குழப்பத்தில் பாமக!

அணையப்போகும் விளக்கு பிரகாசமாகத் தான் எரியும்... அதிமுக மீது அண்ணாமலை பாய்ச்சல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in