கார்த்தி சிதம்பரத்துக்கு சிக்கல்... சீனர்களுக்கு விசா பெற்றுத்தந்த வழக்கில் டெல்லி நீதிமன்றம் சம்மன்!

கார்த்தி சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம்

சீனர்களுக்கு விசா பெற்றுத்தர ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில் காங்கிரஸ் எம்பி -யான கார்த்தி சிதம்பரத்துக்கு சம்மன் அனுப்ப டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி ரூஸ் அவின்யூ நீதிமன்றம்
டெல்லி ரூஸ் அவின்யூ நீதிமன்றம்

கடந்த 2011-ம் ஆண்டில் சீன நாட்டினருக்கு விசாக்களை வழங்குவதற்காக ப.சிதம்பரமும், அவரது உதவியாளரும் 'டிஎஸ்பிஎல்' என்ற நிறுவனத்திடமிருந்து ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது.

பஞ்சாபில் டிஎஸ்பிஎல் நிறுவனத்தை அமைக்கும் பணிகளை சீன நிறுவனம் மேற்கொண்டு வந்தது. அந்த நிறுவனத்துக்காக 263 சீனத் தொழிலாளர்களுக்கு விசா பெற்றுத்தர கார்த்தி சிதம்பரத்துக்கு லஞ்சம் வழங்கப்பட்டதாக சிபிஐ கடந்த 2022 மே மாதம் பதிவு செய்தது. இந்த வழக்கின் அடிப்படையில் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம் தவிர, அவரது உதவியாளர் எஸ்.பாஸ்கரராமன், பதம் துகர், விகாஸ் மகாரியா, மன்சூர் சித்திக் ஆகிய மேலும் 4 பேரின் பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

அமலாக்கத்துறை
அமலாக்கத்துறை

இந்த வழக்கில், தான் கைது செய்யப்படாமல் இருக்க, கார்த்தி சிதம்பரம் ஏற்கெனவே விசாரணை நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். ஆனால், அது கடந்த 2022 ஜூன் மாதம் தள்ளுபடி செய்யப்பட்டது. அதன் பின்னர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அது இப்போது வரை நிலுவையில் உள்ளது. இதற்கிடையே, இந்த விசா வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த முதல் குற்றப்பத்திரிகையில், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்) பிரிவுகள் 3, 4 ஆகியவற்றின் கீழ் கார்த்தி சிதம்பரத்தை குற்றவாளி என குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் டெல்லி ரூஸ் அவின்யூ நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் சம்மன் அனுப்பவும், அவர்கள் அனைவரும் வரும் ஏப்ரல் 5-ம் தேதி நேரில் ஆஜராகவும் சிறப்பு நீதிபதி எம்.கே.நாக்பால் உத்தரவிட்டார்.

இதையும் வாசிக்கலாமே...

வாடிக்கையாளர்களுக்கு இன்று தான் கடைசி நாள்... பஞ்சாப் வங்கி எச்சரிக்கை!

வாயில் தீ கொண்டு ஓவியர் வரைந்த' தல' படம்... வைரலாகும் மாஸ் வீடியோ!

சவுக்கு சங்கர் மீது சாட்டையைச் சொடுக்கிய உயர் நீதிமன்றம்... வீடியோ வருமானத்தை செலுத்த உத்தரவு!

பெங்களூருவில் மீண்டும் பரபரப்பு... பள்ளி அருகே ஏராளமான வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு!

சிட்டிங் எம்பி-க்கள் 14 பேருக்கு மீண்டும் வாய்ப்பு... பரபரக்கும் திமுக வேட்பாளர் பட்டியல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in