பள்ளி மாணவிக்குப் பிரசவம்; பிறந்ததும் இறந்த குழந்தை

பள்ளி மாணவிக்குப் பிரசவம்; பிறந்ததும் இறந்த குழந்தை

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள பள்ளப்பட்டியை சேர்ந்த விவசாயி மகள் அங்குள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவருக்கு சமீப காலமாக தொடர் வயிற்று வலி இருந்ததால், சிகிச்சைக்காக அவரை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவப் பரிசோதனையில் அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவரை விசாரித்தபோது அவர் பதில் ஏதும் சொல்லாமல் இருந்தார். பிறகு அழுதுகொண்டே, தன்னை 2 ஆண்டுகளாக சங்கிலி கருப்பசாமி என்ற வாலிபர் காதலித்ததாகவும், பள்ளி செல்லும் வழியில் தனியே தாங்கள் உறவாடியதாகவும் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து சிவகாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கூறப்பட்டது. போலீஸார் கோக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து அந்த வாலிபரைக் கைது செய்தனர். இதற்கிடையே, மீண்டும் அந்த மாணவிக்கு வயிற்று வலி ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் அவருக்கு குழந்தை பிறந்தது. எடை குறைவாகவும், பலவீனமாகவும் இருந்த அந்த குழந்தையை அவசர சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலமாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். வழியிலேயே குழந்தை இறந்தது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in