கூவம் ஆற்றில் குதித்த இளம்பெண்
கூவம் ஆற்றில் குதித்த இளம்பெண்

நடத்தையில் சந்தேகம்... தினமும் கணவன் துன்புறுத்தல்; கூவம் ஆற்றில் குதித்த இளம்பெண்

நடத்தையில் சந்தேகத்தால் தினமும் கணவர் அடித்து துன்புறுத்தியதால் இளம் பெண் கூவம் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் இவருக்கு கௌரி(34) என்ற மனைவி உள்ளார். கார்த்திக் தனது மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு தினமும் அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.‌ இதனால் மனமுடைந்த கௌரி இன்று மதியம் அரும்பாக்கம் ஸ்கைவாக் அருகே உள்ள மேம்பாலத்தில் இருந்து கூவம் ஆற்றில் குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனே காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கௌரியை பத்திரமாக மீட்டனர். கூவத்தில் குதித்ததால் காலில் காயமடைந்த கௌரியை சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து அரும்பாக்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கணவன் சந்தேகப்பட்டு தினமும் அடித்து துன்புறுத்தியதால் மன உளைச்சலில் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.

x
காமதேனு
kamadenu.hindutamil.in