பெற்றோர் அதிர்ச்சி... கடத்தல் நாடகமாடிய கல்லூரி மாணவி; காதலனுடன் சுற்றியது விசாரணையில் அம்பலம்

சென்னை மாணவி கடத்தல் நாடகம்
சென்னை மாணவி கடத்தல் நாடகம்
Updated on
1 min read

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வந்த மாணவி, தன்னுடைய காதலனுடன் சுற்றியதை பெற்றோரிடம் மறைப்பதற்காக கடத்தல் நாடகம் நடத்திய சம்பவம் அம்பலமாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்தவர் 20 வயது கல்லூரி மாணவி. இவர் கோடம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் ஒன்றில் படித்து வருகிறார். ஞாயிற்றுக்கிழமையான நேற்று மாணவி கல்லூரி செல்வதாக தன் அம்மாவிடம் பொய் சொல்லிவிட்டு, வெளியே சென்றுள்ளார். ஆனால், வழக்கத்தை விட வீட்டிற்கு மிகவும் கால தாமதமாக வந்ததாக தெரிகிறது.

இதனால் பதற்றமடைந்த பெற்றோர், மாணவியிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனால், விழி பிதுங்கிய மாணவி, பெற்றோரை சமாளிக்க வழி தெரியாமல் தன்னை சிலர் கடத்தியதாக கூறினார். கல்லூரிக்கு ஆட்டோவில் சென்ற போது இரண்டு பேர் மயக்க மருந்து கொடுத்து கடத்தியதாகவும், சென்னைக்கு வெளியே தன்னை இறக்கிவிட்டதாகவும் கூறியதாக தெரிகிறது.

இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர், கடத்தியவர்கள் என்ன செய்தார்கள் என கேட்க, அந்த பெண் மழுப்பலாக பேசியதாக தெரிகிறது. இதனால் பயந்து போன பெற்றோர் தனது மகளை அழைத்துக் கொண்டு தேனாம்பேட்டை காவல் நிலையம் சென்று புகார் அளித்தனர். கடத்தல் நடந்த இடம் கோடம்பாக்கம் என்பதால் அங்கு சென்று புகார் அளிக்கும்படி தேனாம்பேட்டை போலீஸார் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக மாணவியின் பெற்றோர், கோடம்பாக்கம் காவல் நிலையம் சென்று நடந்த சம்பவத்தை பற்றி சொல்லி புகார் கொடுத்தார்கள். பட்டப்பகலில் மாணவி கடத்தப்பட்டதாக அளிக்கப்பட்ட புகார் உயர் அதிகாரிகளுக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கடத்தல் கும்பலை பிடிக்க போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினார்கள். தியாகராயநகர் அனைத்து மகளிர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். பெண் சப்-இன்ஸ்பெக்டர் மாணவியிடம் தனியாக விசாரணை நடத்தினார்.

விசாரணையில் மாணவி அளித்த பதில் முன்னுக்கு பின் முரணாக இருந்ததால் சந்தேகம் அடைந்த அவர், மாணவியின் பெற்றோரை வெளியே அனுப்பிவிட்டு தனியாக விசாரித்துள்ளார். அப்போது மாணவி பெற்றோரிடம் பொய் கூறியதும், கல்லூரிக்கு போகாமல் காதலனுடன் சுற்றியதை மறைப்பதற்காக மாணவி பெற்றோரிடம் கடத்தல் நாடகமாடியதும் அம்பலமாகியது. இதையடுத்து பெற்றோரிடம் மகள் செய்த காரியத்தை கூறிய போலீசார், மாணவியை எச்சரித்து புத்திமதி கூறி அனுப்பி வைத்தார்கள்.

இதையும் வாசிக்கலாமே...

சென்னை மாணவி கடத்தல் நாடகம்
புரட்டாசி சனிக்கிழமை: பெருமாளையும், தாயாரையும் இப்படி தரிசித்து வந்தால் தரித்திரம் விலகும்!
சென்னை மாணவி கடத்தல் நாடகம்
’சீமான் இலங்கை தமிழர்களை ஏமாற்றியதற்கு இதோ ஆதாரம்’ வீரலட்சுமி பரபர..!
சென்னை மாணவி கடத்தல் நாடகம்
மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற பள்ளி முதல்வர் கைது!
சென்னை மாணவி கடத்தல் நாடகம்
சொகுசு காரில் வந்து கீரை விற்கும் விவசாயி... வைரலாகும் வீடியோ!
சென்னை மாணவி கடத்தல் நாடகம்
பிக் பாஸ்7: போச்சு... இவர்தான் கேப்டனா...? முதல் நாளே பஞ்சாயத்து கூட்டிய பிக் பாஸ்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in