பள்ளி முதல்வர், 2 உறுப்பினர்கள் அதிரடி பணி நீக்கம்: மாணவன் உயிரிழப்பில் நடவடிக்கை

பள்ளி முதல்வர், 2 உறுப்பினர்கள் அதிரடி பணி நீக்கம்: மாணவன் உயிரிழப்பில் நடவடிக்கை

சென்னை வளசரவாக்கத்தில் பள்ளி வேன் மோதி மாணவர் இறந்த விவகாரத்தில் சென்னை தனியார் பள்ளி முதல்வர் உள்பட 3 பேரை பணிநீக்கம் செய்துள்ளார் முதன்மை கல்வி அதிகாரி.

சென்னை, வளசரவாக்கம் ஆழ்வார்திருநகரில் உள்ள தனியார் பள்ளியில் வேன் மோதி 2-ம் வகுப்பு மாணவன் தீக்க்ஷித் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரி மார்க்ஸ், அம்பத்தூர் வருவாய் துறை அதிகாரி இளங்கோ, காவல் துணை ஆணையர் மீனா உள்ளிட்டோர் பள்ளியில் நேரில் ஆய்வு செய்தனர். இதையடுத்து வேன் ஓட்டுநர் பூங்காவனத்தை கைது செய்த காவல்துறையினர் பள்ளியின் தாளாளர், முதல்வர், ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து, தாளாளர் ஜெயசுபாஷ், முதல்வர் தனலட்சுமி, மாணவர்களை வேனிலிருந்து இறக்கிவிடும் ஊழியர் ஞானசக்தி ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், விபத்து தொடர்பாக தனியார் பள்ளியின் முதல்வர் தனலட்சுமி, போக்குவரத்துக்கு குழுவில் இருந்த 2 உறுப்பினர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கல்வித்துறை பரிந்துரையின் பேரில் 3 பேரையும் முதன்மை கல்வி அதிகாரி பணிநீக்கம் செய்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in